அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகள் தொடர்ந்து செயல்படும்; அமைச்சர் அறிவிப்பு
![அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகள் தொடர்ந்து செயல்படும்; அமைச்சர் அறிவிப்பு](https://tn96news.com/wp-content/uploads/2022/06/magesh-anpil-poyyamoli-1.jpg)
தமிழகத்தில் உள்ள 2381 அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி. , யு.கே.ஜி. வகுப்புகள் , கடந்த 2018ம் ஆண்டு தொடங்கப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், எல்.கே.ஜி., யுகே.ஜி. வகுப்புகள் நடப்பு கல்வி ஆண்டு முதல் மூடப்படுவதாகவும் மாணவர் சேர்க்கை நிறுத்தப்படுவதாகவும் நேற்று முன்தினம் அரசு அறிவிப்பு வெளியானது.
தமிழக பள்ளி கல்வித்துறையின் இந்த அறிவிப்புக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த அறிவிப்பினால் சாதாரண நடுத்தர மக்கள் அவதிப்படுவார்கள் என்று கூறப்பட்டது
இந்த நிலையில் அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி, யு..கே.ஜி வகுப்புகள் தொடர்ந்து செயல்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று அறிவித்துள்ளார்.
எல்.கே.ஜி, யூ.கே.ஜி. வகுப்புகளுக்கு தகுதியான சிறப்பாசிரியர்கள் தேவைக்கேற்ப நியமிக்கப்படுவர் என்றும் அவர் கூறியுள்ளார் . பல்வேறு தரப்பு கோரிக்கையினை ஏற்று முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரைக்கிணங்க வகுப்புகள் தொடர்ந்து செயல்படுவதற்கான உத்தரவை பிறப்பித்து இருப்பதாக அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார் .
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)