கோவில்பட்டியில் தென்மண்டல சி. பி. எஸ். இ. பள்ளிகளுக்கு இடையேயான ஆண்கள் ஆக்கி போட்டி தொடக்கம்
Oplus_16908288
தென்மண்டல சி. பி. எஸ். இ. பள்ளிகளுக்கு இடையிலான ஆண்கள் ஆக்கி போட்டி கோவில்பட்டி வேல்ஸ் வித்யாலயா பள்ளியில் இன்று 25.9.26 தொடங்கியது.
முதல் போட்டியை பள்ளியின் தாளாளர் நாகமுத்து பள்ளியின் இயக்குனர் விஜய ராணி தலைமையில் பள்ளியின் முதல்வர் ஜன்னத் நிஷா ஹுசைன் தொடக்கி வைத்தார். வீரர்களை உடற்கல்வி ஆசிரியர் சுரேந்தர் அறிமுகம் செய்து வைத்தார்.

இப்போட்டியில் 47 சிபிஎஸ்சி பள்ளி அணிகள் விளையாடுகின்றன 14 வயது , 17 வயது, 19 வயதுக்குட்பட்டவர்க்காக தனித்தனியாக போட்டிகள் நடைபெற உள்ளன.
இப் போட்டியில் தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரா, தெலுங்கானா, அந்தமான் நிக்கோபார், போன்ற மாநிலங்களில் இருந்து சிபிஎஸ்இ பள்ளிகள் விளையாடுகின்றன செயற்கை புல் ஆக்கி மைதானத்தில் முதல் போட்டியாக 17 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டியில் நெய்வேலி ஜவகர் பள்ளி 5-0 என்ற கோல் கணக்கில் காஞ்சிபுரம் வேலம்மாள் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
ஓசூர் எம் பி எம் பள்ளி 5-0 என்ற கோல் கணக்கில் கூடுவாஞ்சேரி வேலம்மாள் பள்ளி அணியை வென்றது.
அரியலூர் ராம்கோ பள்ளி அணி 3- 0 என்ற கோல் கணக்கில் நிஜாம் பெட் (தெலுங்கானா) வேல்ஸ் வித்யாஷ்ரம் பள்ளியை வீழ்த்தி வெற்றி பெற்றது.கோவில்பட்டி வேல்ஸ் வித்யாலயா பள்ளி 3- 0 என்று கோல் கணக்கில் ஓசூர் எம் பி.எம்.பள்ளி அணியை வெற்றி கண்டது.

நாடார் மேல்நிலைப்பள்ளி ஆக்கி மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் 14 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் கோவில்பட்டி வேல்ஸ் வித்யாலயா பள்ளி 1-0 என்ற கோல் கணக்கில் கூடுவாஞ்சேரி வேலம்மாள் பள்ளியை வென்றது.
கோயமுத்தூர் அகஸ்தியா அகாடமி பள்ளி 3-0 என்ற கோல் கணக்கில் சேலம் ஸ்ரீ சேஷா பள்ளியை வீழ்த்தி வெற்றி பெற்றது. மேட்டுப்பாளையம் எஸ் ஜே என் பள்ளி 3-0 கோல் கணக்கில் சூரப்பட்டு வேலம்மாள் பள்ளியை தோற்கடித்தது.
அரியலூர் ராம்கோ பள்ளி 7-0 என்ற கோல் கணக்கில் பக்தவச்சலம் பள்ளியை வெற்றி பெற்றது
மூன்றாவது மைதானமான வேல்ஸ் வித்யாலயா பள்ளி மைதானத்தில் lநடைபெற்ற முதல் போட்டியில் 14 வயதுக்குடோருக்கான பிரிவில் ஆந்திரா சென் ஜோசப் பள்ளி 1-0 என்று கோல் கணக்கில் அரியலூர் கோல்டன் கேட்ஸ் பள்ளியை வெற்றி பெற்றது.

கோயம்புத்தூர் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி பள்ளி 2-0 என்ற கோல் கணக்கில் கோயமுத்தூர் ஒரிசன் பள்ளி அணியை வென்றது கோயமுத்தூர் சுகுணா பெப் பள்ளி 1-0 என்ற கோல் கணக்கில் பொன்னேரி வேலம்மாள் பள்ளியை தோற்கடித்தது. தென்காசி வேல்ஸ் வித்யாலயா பள்ளி 1-0 என்ற கோல் கணக்கில் நெய்வேலி ஜவகர் பள்ளியை வெற்றி பெற்றது.கோவில்பட்டி வேல்ஸ் வித்யாலயா விருதுநகர் கே வி எஸ் பள்ளிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் சம நிலையில் முடிவு பெற்றது.
இன்று நடைபெற்ற போட்டியில் நடுவர்களாக காளிதாஸ், அஸ்வின், மணிகண்டன், சிவானந்தம், வேல்முருகன், எல்பின், சண்முகப்பிரியா, கோகுல், ராம் கார்த்திக், சிங்கராஜ், மனோகர், கௌதம், மாதவன், தீனதயாளன், புகழேந்தி, சுரேஷ்குமார், ஆகியோர் செயல்பட்டனர்
தொடர்ந்து 3 நாட்கள் போட்டிகள் நடக்கின்றன. நாளை சனிக்கிழமை காலை 3 மைதானங்களிலும் போட்டிகள் தொடர்ந்து நடைபெறும்.போட்டிகள் அனைத்தும் நாக் அவுட் சுற்றாக நடைபெறும்.அரை இறுதிக்கு தகுதி பெறும் அணிகள் லீக் முறையில் நடத்தப்பட்டு முதல் நான்கு இடங்களை தீர்மானிப்பர்







