கடம்பூர் ராஜு உள்பட 11 முன்னாள் அமைச்சர்களுக்கு துணை பொதுச்செயலாளர் பதவி; விஜய் அறிவிப்பு
2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றி கழகம் பெரும்பான்மை இடங்களை பிடித்து ஆட்சி அமைத்ததன் மூலம் தமிழக அரசியலில் திருப்புமுனை ஏற்பட்டுள்ளது.
அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களில் 6 எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்து விட்டு தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தனர். அந்த சமயத்தில் முன்னாள் அமைச்சர்கள் பலரும் தனித்தனி பிரிவுகளாக சென்று தமிழக வெற்றி கழகத்தில் இணைந்து பணியாற்றி வருகிறார்கள். அவர்களில் சிலருக்கு கட்சிப் பதவி மற்றும் வாரிய தலைவர் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன..

மற்ற முன்னாள் அமைச்சர்களுக்கு எந்த பொறுப்பு வழங்கப்படாததால் அவர்கள் அதிருப்தியில் இருந்ததாக சொல்லப்படுகிறது.
இந்த சூழ்நிலையில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் அக்டோபர் ஆறாம் தேதி நடைபெற இருக்கிறது.இந்த தேர்தலில் ஐந்து முறை போட்டி நிலவுகிறது. தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது.
எதிர் நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் கட்டமைப்பை மேலும் பலப்படுத்தும் வகையில் அதிமுகவிலிருந்து விலகி த. வெ. க.வந்த 11 முன்னாள் அமைச்சர்களுக்கு துணைப் பொதுச் செயலாளர் பதவி அளிக்கப்பட்டுள்ளது.இதற்கான அறிவிப்பை கட்சித் தலைவர் விஜய் இன்று மாலை வெளியிட்டுள்ளார். துணைப் பொதுச் செயலாளர் பதவி பெற்றுள்ள முன்னாள் அமைச்சர்கள் விவரம் வருமாறு:-

1.கடலூர்
MSM. ஆனந்தன்
2.M.C.சம்பத் திருப்பூர் வடக்கு
3. K. இராதாகிருஷ்ணன் உடுமலைப்பேட்டை
4..K.V.ராமலிங்கம் ஈரோடு மேற்கு
5.M.ஆனந்தன் உளுந்தூர்பேட்டை
6.கடம்பூர் ராஜு கோவில்பட்டி
7. K.T. பச்சைமால் கன்னியாகுமரி
8.வெல்லமண்டி N. நடராஜன் திருச்சி கிழக்கு
9. N. R. சிவபதி,முசிறி
10. வைகைச்செல்வன் விருதுநகர் 11. S. வளர்மதி ஸ்ரீரங்கம்
புதிய மாவட்ட செயலாளர்களாக Dr. J. சந்தீப் ஆனந்த், (சென்னை ).K.G. முத்து வெங்கடேஸ்வரன் (திருப்பூர் )
தொள்ளமூர் கண்ணன்( விழுப்புரம
ம் ) VCR. குமரன், (திருவள்ளூர் )
ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்
மேலும், மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதியை உள்ளடக்கிய திருப்பூர் புறநகர் தெற்கு மாவட்ட கழகம் உருவாக்கப்பட்டு அதற்கு, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான
C. மகேந்திரன்
மாவட்டக் கழகச் செயலாளராக நியமனம் செய்யப்படுகிறார் என்று தமிழக வெற்றி கழக தலைவர் ஜோசப் விஜய் அறிவித்துள்ளார்.
மேலும் அவர் குறிப்பிடுக்கையி” புதிய நிர்வாகிகள் அனைவருக்கும் வாழ்த்துகள். கழகத்தின் ஆக்கப்பூர்வப் பணிகள் குறித்து எனது உத்தரவு மற்றும் ஆலோசனையின்படியும், பொதுச் செயலாளர் .என்.ஆனந்த் வழிகாட்டுதலின்படியும், ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள நிர்வாகிகளுடன் இணைந்து இந்தப் புதிய நிர்வாகிகள், பணிகளை மேற்கொள்வார்கள். கழகத் தோழர்கள், இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்







