கோவில்பட்டியில் டி.வி.எஸ்.இருசக்கர வாகன எக்சேஞ்ச் மேளா தொடக்கம்
Oplus_16908288

டி.வி.எஸ். ,மோட்டார் கம்பெனி மற்றும் கோவில்பட்டி வெங்கடாசலம் ஏஜென்சி LLB இணைந்து டி.வி.எஸ்.சின் ஆடி மாத சிறப்பு கடன் மற்றும் எக்சேஞ்ச் மேளாவை கோவில்பட்டியில் நடத்துகின்றன,

இந்த சிறப்பு விற்பனை மேளா எட்டயபுரம் சாலையில் உள்ள சி.சிதம்பர நாடார் -காமாட்சி அம்மாள் திருமண மண்டபத்தில் இன்று 27,ம்தேதி காலை தொடங்கியது, தொடர்ந்து செவ்வாய், புதன்கிழமைகளில் இந்த மேளா நடக்கிறது.
டி.வி.எஸ்.நிறுவன தயாரிப்புகளான எக்ஸ்.எல்.100 அலாய் வீல், ஜெஸ்ட் 110, ஜூபிடர் 110, ஜூபிடர் 125, என்டார்க் 125, என்டார்க் 150 , டி.வி.எஸ்.ஸ்போர்ட், டி.வி.எஸ்.ரேடியன், டி.வி.எஸ். ரேடியர், அபாச்சே 160/180/200 டி.வி.எஸ் ரோனின் 350 உள்ளிட்ட அனைத்து மாடல் வாகனங்களும் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு இருந்தன.

பொதுமக்கள் தங்களுக்கு பிடித்த வாகனத்தை நேரில் பார்வையிட்டு உரிய விளக்கங்களை கேட்டு தெரிந்து கொண்டனர்,.
குறைந்த முன் பணம் ரூ,5555. இதே போல் குறைந்த வட்டி விகிதம் 5.99% என்ற அளவில் புதிய வாகனம் விற்பனை ஆனது,. குறைந்த முன்பணம் எளிய மாத தவணை, உடனடி டெலிவரி என்ற இலக்குடன் நடத்தப்பட இந்த மேளாவில் . புதிய வாகனத்துக்கான நிதி உதவியை டி.வி.எஸ் கிரெடிட் நிறுவனம் அளிக்கிறது, நிறுவன ஊழியர்கள் முகாமிட்டு உடனுக்குடன் கடன் அப்ரூவல் செய்தனர்.
காலை 9.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை இந்த எக்சேஞ்ச மேளா நடந்தது,. முதல் நாளில் பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று வாகனங்களை தேர்வு செய்தார்கள்.








