கோவில்பட்டி திருவள்ளுவர் மன்ற கூட்டம்
Oplus_16908288
கோவில்பட்டி திருவள்ளுவர் மன்ற கூட்டம் அஞ்சல் அலுவலக தெருவில் உள்ள மன்ற கட்டிடத்தில் நடந்தது.
‘படைப்பாளிகளின் பார்வையில் அவர்தம் படைப்புகள்’ என்ற தலைப்பில், கோவில்பட்டி திருவள்ளுவர் மன்றத்தின் ஆய்வுக் கூட்டம் நடந்தது. தொழிலதிபர் வெங்கடேஷ் தலைமை தாங்கினார்.ஆஸ்கார் கல்லூரி இயக்குநர் வினோத் முன்னிலை வகித்தார்.

பாண்டியன் கிராம வங்கியின் முன்னாள் மேலாளரும், கரிசல் எழுத்தாளருமான காமராஜ், எழுத்தாளர் முருகேஸ்வரி, அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி தமிழாசிரியை கெங்கம்மாள் ஆகியோர் கலந்து கொண்டு ஆய்வுரை நிகழ்த்தினர்.
அதனைத் தொடர்ந்து, பெருந்தலைவர் காமராஜரின் 124-வது பிறந்த நாளை முன்னிட்டு கோவில்பட்டி வட்டார அளவிலான பள்ளி மாணவ, மாணவிகளுக்கான பேச்சு மற்றும் கட்டுரைப் போட்டி நடந்தது. பின்னர், போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு திருவள்ளுவர் மன்ற துணைத் தலைவர் திருமலை முத்துசாமி பரிசு வழங்கிப் பாராட்டினார்.

விழாவில், தொழிலதிபர்கள் பரமசிவம், லட்சுமணப்பெருமாள், ரவிமாணிக்கம் மற்றும் தமிழ் ஆர்வலர்கள், தமிழாசிரியர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை திருவள்ளுவர் மன்றத் தலைவர் கருத்தப்பாண்டி, செயலாளர் நம்.சீனிவாசன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.








