கோவில்பட்டியில் மாணவியர் கபடி போட்டி: மின்னல் ஸ்போர்ட்ஸ் கிளப் அணி முதலிடம்

தூத்துக்குடி மாவட்ட பள்ளி அளவிலான இரண்டாம் ஆண்டு மாணவியர் கபடி போட்டி நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக முருகேச பாண்டியன் , பொன் முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர். தேவேந்திர குல வேளாளர் கல்வி சங்க உறுப்பினர்கள், அனைத்து அணிகளுக்கும் உணவு அன்பளிப்பு செய்த செல்வத்தேவர்,
சிறப்பு அழைப்பாளர்களாக ஆசிரியர் அந்தோணி, முனைவர் சம்பத்குமார், சத்யா செல்வின் (த.வெ.க) பங்கேற்றனர்

தூத்துக்குடி வட்டத்தில் உள்ள 12 அணிகள் போட்டியில் பங்கு பெற்றன. லீக் மற்றும் நாக் அவுட் முறையில் நடைபெற்றது. முதல் அரையிறுதி போட்டியில் கோவில்பட்டி ஸ்டெபி ஸ்போர்ட்ஸ் அகாடமி மற்றும் மின்னல் ஸ்போர்ட்ஸ் கிளப் அணிகள் மோதின. இதில் 2 புள்ளிகள் வித்தியாசத்தில் மின்னல் ஸ்போர்ட்ஸ் கிளப் அணி வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.
மற்றொரு அரையிறுதி போட்டியில் பிரசன்னா ஸ்போர்ட்ஸ் கிளப் முத்தையாபுரம் தாரணி பவுண்டேஷன் தூத்துக்குடி ஆகிய அணிகள் மோதியதில் பிரசன்னா ஸ்போர்ட்ஸ் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
இறுதிப் போட்டியை அமைச்சர் பி மதன் ராஜா தொடங்கி வைத்தார். பரபரப்பான போட்டியில் மின்னல் ஸ்போர்ட்ஸ் கிளப் அணி 20 புள்ளிகளும் பிரசன்னா ஸ்போர்ட்ஸ் கிளப் 17 புள்ளிகளும் பெற்றது.
இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் முதல் பரிசை கோவில்பட்டி மின்னல் ஸ்போர்ட்ஸ் கிளப் அணியும் இரண்டாம் பரிசை தூத்துக்குடி முத்தையாபுரம் பிரசன்னா ஸ்போர்ட்ஸ் கிளப் அணியும் பெற்றது.
மூன்றாவது பரிசை கோவில்பட்டி ஸ்டெபி ஸ்போர்ட்ஸ் அகாடமி அணியும் நான்காவது பரிசை தூத்துக்குடி தாரணி பவுண்டேசன் அணியும் பெற்றது.

பரிசளிப்பு விழாவில் நகர் மன்ற உறுப்பினர் கவியரசன் முதல் பரிசு வழங்கினார். முதல் பரிசுக்கான கோப்பையை வினோத் பிரபாகரன் (த.வெ.க கோவில்பட்டி மத்திய ஒன்றிய பொருளாளர்) வழங்கினார்.
அகடாமியின் ஆலோசகர்களாக பரதன், ஆசிரியர் பரமசிவம், வழக்கறிஞர் பெரியதுரை நடுவர்களாக முனீஸ்வரன், சரவணன், செல்வகுமார், விஜயகுமார் , பாலசிங், லட்சுமண பிரபு ஆகியோர் பணியாற்றினர் அகாடமியின் இயக்குனர் செந்தூர் கனி, செயலாளர் முனைவர் கரிகாலன் ஒருங்கிணைப்பாளர்கள் சதீஷ், ஜேசா,வேல் ஆகியோர் போட்டி ஏற்பாடுகளை செய்திருந்தினர்.







