கோவில்பட்டி சைவ செட்டியார் சங்க கூட்டம்; அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு

கோவில்பட்டி சைவ செட்டியார் சங்கம் 53வது ஆண்டு மகா சபைக் கூட்டம் மந்தித்தோப்பு ரோடு சைவ செட்டியார் மீட்டிங் ஹாலில் நடந்தது.
கூட்டத் தலைவர் மீனாட்சி சுந்தரம், சங்கத் தலைவர் சிவபிரகாசம் தலைமை தாங்கினர். பொருளாளர் கலியுகத்து அய்யனார், துணைத் தலைவர் சுப்பிரமணியன், துணைச் செயலாளர் லட்சுமணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் சேனாபதி ஆண்டறிக்கை வாசித்தார்.

கூட்டத்தில், சைவ செட்டியார் சமூகத்தில் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் முதலிடம் பிடித்த மாணவர் சிவசங்கரபாண்டியன், 2-வது இடம் பிடித்த மாணவி சங்கரேஸ்வரி, 10-ம் வகுப்பில் முதலிடம் பிடித்த மாணவி செம்மலர், 2-வது இடம் பிடித்த ராஜலட்சுமி ஆகியோருக்கு பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.
மேலும், கோலம், ஓவியம் மற்றும் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும் பரிசு வழங்கப்பட்டது. கூட்டத்தில், நிர்வாகக்குழு உறுப்பினர்கள், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.








