கோவில்பட்டியில் பள்ளி மாணவ, மாணவியருக்கான மண்டல ஆக்கி போட்டி


கோவில்பட்டி பிருந்தாவன்ஸ் கிட்ஸ் யுனிவர்சிட்டி பள்ளி சார்பாக கிருஷ்ணா நகரில் CISCE பள்ளிகளுக்கு இடையில் மண்டல அளவிலான ஆக்கி போட்டி கிருஷ்ணாநகர் மைதானத்தில் இரண்டு நாட்கள் நடைபெற்றது.,
இப்போட்டியில், மண்டலத்திற்குட்பட்ட 11 CISCE பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு விளையாடினர் இப் போட்டியில் மொத்தம் 54 போட்டிகள் காலை முதல் இரவு 12 மணி வரை பகல் இரவு ஆட்டமாக மின்னொளியில் நடைபெற்றது இப் போட்டியில் 14 வயது 17 வயது 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆண்கள் மற்றும் பெண்கள் ஆக்கி போட்டிகள் தனித்தனியாக லீக் மற்றும் நாக் அவுட் முறையில் நடந்தன

இறுதியில் 19 வயதுற்குட்பட்ட ஆண்கள் பிரிவில் ஊட்டி லைட் லா நினைவு பள்ளி ஜூனியர் கல்லூரி முதலிடத்தை பெற்றது, கோத்தகிரி புனித ஜூட்ஸ் பள்ளி இரண்டாவது இடத்தை பிடித்தது.
பெண்கள் பிரிவில் ஊட்டி புனித ஹில்டா பள்ளி முதல் இடத்தையும் சென்னை என் பி எஸ் இன்டர்நேஷனல் பள்ளி இரண்டாவது இடத்தையும் பிடித்தன.
17 வயதுக்குட்பட்டோருக்கான ஆண்கள் பிரிவில் ஊட்டி கிரசன்ட் கேஸ்டல் பப்ளிக் பள்ளி முதல் இடத்தையும் ஊட்டி பிருந்தாவன் பப்ளிக் ஸ்கூல் இரண்டாவது இடத்தையும் பெற்றன,

14 வயதுக்குட்பட்டோருக்கான ஆண்கள் பிரிவில் ஊட்டி கிரசன்ட் கேஸ்டல் பப்ளிக் பள்ளி முதலிடத்தையும் இரண்டாவது இடத்தை ஊட்டி லைட் லா நினைவு பள்ளி அணியும் பெற்றன,
பெண்கள் பிரிவில் ஊட்டி புனித ஹில்டா பள்ளி முதல் இடத்தையும் சென்னை என் பி எஸ் இரண்டாவது இடத்தையும் தட்டிச் சென்றனர்
பரிசளிப்பு விழாவில் கோவில்பட்டி பிருந்தாவன்ஸ் கிட்ஸ் யுனிவர்சிட்டி பள்ளியின் தாளாளர் * பார்த்திபன்* , இயக்குநர். அர்ஜுன் பாரத்* ஆகியோர் வெற்றி பெற்ற பள்ளிகளுக்கு கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கி கவுரவித்தனர்.

பிருந்தாவன் பள்ளியின் உடற் கல்வி ஆசிரியர் விவின் காந்த் அனைவரையும் வரவேற்றார் போட்டியின் இயக்குனராக செயல்பட்ட திருச்செல்வம் நன்றி கூறினார் போட்டியின் நடுவர்களாக காளிதாஸ், மதன்குமார், சிவானந்த மாரியப்பன், அருணாச்சல வடிவு, மதனா, சண்முக பிரியா, பேபி வேல்முருகன் ,கவியரசன், மதன் ஆகியோர் செயல்பட்டனர்
முன்னாள் இந்திய ஆக்கி வீரர் அஸ்வின் தேர்வு குழு தலைவராக இருந்து மூன்று பிரிவுகளுக்கும் சிறந்த வீரர்களை தேர்வு செய்தார்







