சங்கரன்கோவில் ஆடிதபசு தேரோட்டம்: பஸ், கனரக வாகனங்கள் போக்குவரத்தில் நாளை மாற்றம்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ஆடித்தபசு திருவிழாவை முன்னிட்டு நாளை ஜூலை 28 தேரோட்டம் நடக்கிறது.. இதையொட்டி பஸ்கள் போக்குவாரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது,
இது பற்றிய விவரம் வருமாறு:-
*.திருநெல்வேலியிலிருந்து வரும் பஸ்கள் ராஜபாளையம், மதுரை செல்லும் வழி: திருநெல்வேலியில் இருந்து வரும் பஸ்கள் சண்முகநல்லூர் விலக்கு வழியாக சின்னகோவிலான்குளம், சூரங்குடி, தர்மத்தூரணி, நடுவக்குறிச்சி, குத்தாலப்பேரி, பொய்கைமேடு, தளவாய்புரம் வழியாக சங்கரன்கோவில், ரயில்வேபீடர் ரோடு, TB junction signal வழியாக ராஜபாளையம் மதுரை செல்ல வேண்டும்.

*திருநெல்வேலியில் இருந்து சங்கரன்கோவில் செல்லும் சிறப்பு பஸ்கள் தற்காலிக பேருந்து நிலையம் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனை அருகில் உள்ள கோமதியம்மாள் மகளிர் மேல்நிலைபள்ளி வந்து திரும்பி செல்ல அனுமதிக்கப்படும்.
*.திருநெல்வேலியில் இருந்து தென்காசி, புளியங்குடி, செல்லும் வாகனங்கள் சண்முகநல்லூர் விலக்கு வழியாக சின்னகோவிலான்குளம், சூரங்குடி, தர்மத்தூரணி, நடுவக்குறிச்சி, குத்தாலப்பேரி, பொய்கைமேடு, தளவாய்புரம் வழியாக சங்கரன்கோவில், ரயில்வேபீடர் ரோடு, வடக்குப்புதூர் வழியாக தென்காசி, புளியங்குடி செல்ல வேண்டும்.
*.ராஜபாளையத்தில் இருந்து வரும் பஸ்கள் திருநெல்வேலி செல்லும் வழி;:: ராஜபாளையத்திலிருந்து திருநெல்வேலி செல்லும் பேருந்துகள் அனைத்தும் பாரத ஸ்டேட் பேங்க் எதிரே உள்ள சாலை வழியாக கீதாலயா தியேட்டர் ரோடு, கருவாட்டுகடை முக்கு, திருவேங்கடம் சாலை, புதிய பேருந்து நிலையம், கழுகுமலை ரோடு, இராமநாதபுரம் விலக்கில் வலதுபுறம் திரும்பி இராமநாதபுரம், நெடுங்குளம் விலக்கு வழியாக திருநெல்வேலி செல்ல வேண்டும்.
*கோவில்பட்டி, திருவேங்கடத்திலிருந்து வரும் பஸ்கள் தென்காசி சுரண்டை, புளியங்குடி செல்லும் வழி: கோவில்பட்டி, திருவேங்கடத்தில் இருந்து வரும் பஸ்கள் அனைத்தும் செல்வா சில்க்ஸ் சாலையில் வலதுபுறம் திரும்பி நெசவாளர் காலணி, உடப்பன்குளம் ரோடு, வையாபுரி மருத்துவமனை ஐந்து வீட்டு மனை வழியாக ராஜபாளையம் ரோடு, TB junction signal ல் வலதுபுறம் திரும்பி ரயில்வே பீடர் சாலை வழியாக தென்காசி, சுரண்டை செல்ல வேண்டும்.

*.கழுகுமலையில் இருந்து வரும் பஸ்கள் தென்காசி சுரண்டை செல்லும்வழி: கழுகுமலையில் இருந்து வரும் பஸ்கள் அனைத்தும் MP house ல் இருந்து வலதுபுறம் திரும்பி புதிய பேருந்து நிலையம், திருவேங்கடம் சாலை, செல்வா சில்க்ஸ் சாலையில் வலதுபுறம் திரும்பி நெசவாளர் காலனி, உடப்பன்குளம் ரோடு, வையாபுரி மருத்துவமனை ஐந்து வீட்டுமனை வழியாக ராஜபாளையம் ரோடு, TB junction signal ல் ல் வலதுபுறம் திரும்பி ரயில்வே பீடர் சாலை வழியாக தென்காசி, சுரண்டை செல்ல வேண்டும்.
*தென்காசி, சுரண்டை, புளியங்குடி ல் இருந்து வரும் பஸ்கள் கோவில்பட்டி, கழுகுமலை, திருவேங்கடம் செல்லும் வழி;
தென்காசி, சுரண்டை, புளியங்குடியில் இருந்து கோவில்பட்டி செல்லும் பஸ்கள் அனைத்தும் சங்கரன்கோவில் ரயில்வே கேட், ரயில்வே பீடர் ரோடு,, ராஜபாளையம் ரோடு, பாரத ஸ்டேட் பேங்க் எதிரே உள்ள சாலை வழியாக கீதாலயா தியேட்டர் ரோடு, கருவாட்டுகடை விலக்கு, திருவேங்கடம் சாலை, புதிய பேருந்துநிலையம் தற்காலிக பேருந்து நிலையம் வந்து கோவில்பட்டி, கழுகுமலை, திருவேங்கடம் செல்ல வேண்டும்.
*.ராஜபாளையம் ரோடு கல் மண்டபம், தீயணைப்புதுறை நிலையம் அருகில் தற்காலிக பேருந்து நிலையம் இயக்கப்படும்.

*.திருவேங்கடம் ரோடு புதிய பேருந்து நிலையத்தில் தற்காலிக பேருந்து நிலையம் இயக்கப்படும்.
*.சுரண்டை ரோடு சுரண்டை ஜங்சனில் தற்காலிக பேருந்து நிலையம் இயக்கப்படும்.
*.திருநெல்வேலி ரோடு, சங்கரன்கோவில் அரசு மருத்துவமனை அருகில் உள்ள கோமதியம்மாள் மகளிர் மேல்நிலைபள்ளி அருகில் தற்காலிக பேருந்து நிலையம் இயக்கப்படும்.
28.7.2026 அன்று கனரக வாகனங்கள் லாரி, டாரஸ் லாரி, டேய்கண்டேன்னைர் ட்ரைலர் லாரி அனைத்தும் சங்கரன்கோவில் நகர் பகுதி வழியாக செல்ல அனுமதி இல்லை.
கனரக வாகனங்கள் செல்லும் வழிகள்
1.கோவில்பட்டி, கழுகுமலை வழியாக வரும் கனரக வாகனங்கள் அனைத்தும் குருவிகுளம், திருவேங்கடம் பருவக்குடி விலக்கு வழியாக தென்மலை சிவகிரி வழியாக தென்காசி செல்ல வேண்டும்.
2.திருவேங்கடம் வழியாக வரும் கனரக வாகனங்கள் அனைத்தும் திருவேங்கடம் பருவக்குடி விலக்கு வழியாக தென்மலை சிவகிரி வழியாக தென்காசி செல்ல வேண்டும்.
3.திருநெல்வேலி வழியாக வரும் கனரக வாகனங்கள் அனைத்தும் சண்முகநல்லூர் விலக்கு சின்னகோவிலான்குளம் நடுவக்குறிச்சி வீரசிகாமணி, பாம்புகோவில், புளியங்குடி ரோடு வழியாக சிந்தாமணி, வாசுதேவநல்லூர் வழியாக மதுரை, க ராஜபாளையம் செல்ல வேண்டும்.
4.தென்காசி வழியாக வரும் கனரக வாகனங்கள் அனைத்தும் கடையநல்லூர், புளியங்குடி, வாசுதேவநல்லூர்;, சிவகிரி, ராஜபாளையம் வழியாக விருதுநகர், மதுரை செல்ல வேண்டும்.







