கோவில்பட்டி எஸ். எஸ். டி. எம். கல்லூரியில் மாணவர்களின் தனித்திறமைகளை வெளிப்படுத்த உதவும் சங்கம் தொடக்கம்

கோவில்பட்டி எஸ்.எஸ்.டி.எம் கல்லூரியில் கணினி அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம் மற்றும் கணினி பயன்பாடுகள் துறைகளின் சார்பில் ‘ZESTA’ துறைசார் சங்க தொடக்க விழா நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கல்லூரி செயலாளர் கண்ணன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக தொழில்முறை பயிற்சியாளர் மற்றும் ஆலோசகர் குமரேசன் தர்மசீலன் கலந்து கொண்டார் .முதல்வர் செல்வராஜ் மற்றும் கணினி அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை, கணினி பயன்பாட்டுத்துறை தலைவர் செல்வலட்சுமி முன்னிலை வகித்தனர்.
பிரபாகரன் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார்.
கே. ஆர்.கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கணினி அறிவியல் துறைத் தலைவர் சரவணன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, “Next Gen Intelligence” என்ற தலைப்பில் பேசினார்.
அவர் பேசுகையில் மாணவர்கள் தனக்குள் மறைந்துள்ள திறமைகளை வெளிக்கொணரவும், அவர்களின் படைப்பாற்றல், தொழில்நுட்ப அறிவு, தலைமைத்துவத் திறன் மற்றும் தனித்திறன்களை மேம்படுத்தவும் ‘ZESTA’ சங்கம் தொடங்கப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவை நல்ல முறையில் கையாள்வது பற்றி மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.மாணவர்களின் அறிவு, திறமை மற்றும் படைப்பாற்றலை வளர்க்கும் வகையில் பல்வேறு கல்வி, தொழில்நுட்ப மற்றும் திறன் மேம்பாட்டு நிகழ்ச்சிகளை நடத்துவதற்கான சிறந்த தளமாக செயற்கை நுண்ணறிவு இருக்கும் என்றார்.

.இந்நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளராக கற்பகம் செயல்பட்டார். தொடக்கத்தில் மாணவி ஜனனி வரவேற்று பேசினார். முடிவில் மாணவி பிரபா நன்றி கூறினார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரியின் கணினி துறை பேராசிரியர்கள் மரியதிவ்யா ,திலக்ராஜா, வளர்மதி , தேவிஸ்ரீ மற்றும் அகிலாதேவி ஆகியோர் செய்திருந்தனர்.







