கோவில்பட்டி புதுக்கிராமம் பகுதியில் கழிவு நீர் செல்லும் பாதையை அடைத்த ரெயில்வே நிர்வாகம்; கருணாநிதி எம்.எல்.ஏ. பேச்சுவார்த்தை
கோவில்பட்டி புதுக்கிராமம் திருமங்கைநகர், முகம்ம துசாலியாபுரம் பகுதியில் வாறுகால் வழியாக செல்லும் கழிவு நீர் ரெயில்வே தண்டவாளம் உள்ள பாதை வழியாக சென்று வந்தது.
ரெயில்வே பாதை வழியாக கழிவு நீர் செல்வதை தடுக்க வேண்டும், இல்லையென்றால்நாங்கள் நடவடிக்கை எடுக்க இருப்பதாக தெரிவித்து ரெயில்வே நிர்வாகம் கோவில்பட்டி நகராட்சி நிர்வாகத்திற்கு கடிதம் எக்ளுதியது,.\

.மேலும் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசத் தொடங்கியது மட்டு மின்றி சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் ஏற்பட் டது. இது குறித்து தகவல் கிடைத்ததும் கோவில் பட்டி சட்டமன்ற உறுப்பினர் கா. கருணாநிதி சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு ரெயில்வே துறை அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
பேச்சுவார்த்தையில் தற்காலிகமாக கழிவுநீர் செல்வதற்கு ரெயில்வே துறை அதிகாரிகள் சம்மதித்தனர்., விரைவில் ரெயில்வே நிர்வாகம் மற்றும் நகராட்சி அதிகாரிகள் கலந்து ஆலோசித்து இந்த பிரச்சனைக்கு முடிவு காணவும் அறிவுறுத்தப்பட்டது.
இந்நிலையில் அதைக்கப்பட்ட பகுதிகளை நகராட்சி தூய்மை பணியாளர்கள் மூலம் அகற்றியதை தொடர்ந்து தேங்கிய கழிவு நீர் செல்ல தொடங்கியது.
இந்த கழிவு நீர் தண்வாளத்தை கடந்து சென்றால் மட்டுமே ஓடையில் சென்று வெளியேறும் வகையில் நீரோட்டம் அமைந்துள்ளதால் ரயில்வே நிர்வாகம் தான் இப்பணியை செய்ய வேண்டும் அதை விடுத்து வாறுகாலை மண்ணிட்டு மூடுவதால் பொதுமக்க ளுக்குத்தான் சிரமம் ஏற்ப டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

ஒன்று ரயில்வே நிர்வாகம் அந்த பணியினை செய்ய வேண்டும் அல்லது நகராட்சியில் அதற்கானபணம் செலுத்தி பணியினை முடிக்க வேண்டும் என்று =ரயில்வே அதிகாரிகளிடம் கருணாநிதி எம்.எல்.ஏ.எடுத்துக் கூறியதால் பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டு முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து கொட்டி அடைத்த மண் களை அப்புறப்படுத்தினர்.
நீன்ட நாள் கோரிக்கையை சட்டமன்ற உறுப்பினர் முடித்து வைத்ததால் அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.







