கோவில்பட்டி பஸ் நிலையத்தில் பயங்கரம்: காதலி கண்முன்னே காதலன் குத்திக்கொலை
கோவில்பட்டி அருகே கரடிகுளம் பகுதியைச் சேர்ந்த மாணிக்கம் என்பவரது மகன் சஞ்சய் (வயது 18), இவருக்கும் கெச்சிலாபுரத்தை சேர்ந்த குமார் என்பவரது மகள் கனகலெட்சுமிக்கும் இடையே காதல் இருந்து வந்தது. இதற்கு பெண்ணின் வீட்டில் இருந்து எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று இரவு சஞ்சய் மற்றும் நண்பர்கள் சிலர் கோவில்பட்டி கூடுதல் பஸ் நிலையம் அருகே நின்று கொண்டிருந்தனர். அப்போது காதலியின் தந்தை குமார் மற்றும் அவரது உறவினர்கள் மாரிமுத்து, சங்கரநாராயணன் ,ஆகியோர் காதலி கனகலெட்சுமியை அழைத்துக் கொண்டு சஞ்சையிடம் பேசலாம் என ஏமாற்றி கூடுதல் பேருந்து நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.
பஸ் நிலையத்தில் .சஞ்சையை கண்ட பெண்ணின் தந்தை குமார் மற்றும் அவரது உறவினர் கள் சஞ்சய்யுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றவே அவர்கள் சஞ்சையை கத்தியால் சரமாரியாக குத்தியதாக கூறப்படுகிறது.
கழுத்து மற்றும் சில இடங்களில் சஞ்சய்க்கு கத்தடிக்குத்து விழுந்தது.. சஞ்சய் ரத்த காயங்களுடன் அவரது நண்பர் களுடன் சேர்ந்து ஓடினார்/. அவர்களை துரத்தி சென்றபோது மாரிமுத்துவுக்கு கத்தி பட்டு காயம் ஏற்பட்டது. கத்திக்குத்து சம்பவத்தில் காயம் அடைந்த சஞ்சய் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதில் சிகிச்சை பலனின்றி இறந்து போனார்.

இது குறித்து கோவில்பட்டி மேற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து பெண்ணின் தந்தை குமார் மற்றும் சங்கரநாரா=யணன், மாரிமுத்து ஆகிய 3 பேரையும் கைது செய்த=னர். காதல் விவகாரத்தில் காதலி கண்முன்னே காதலன் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப் பினைஏற்படுத்தி உள்ளது.







