கம்பன் கழகத்தின் இலக்கிய ஆய்வரங்கம்
கோவில்பட்டி கம்பன் கழகத்தின் 335 வது இலக்கிய ஆய்வரங்கம் நடைபெற்றது. எழுத்தாளர் தங்கத்துரையாசி தலைமை தாங்கினார்.கம்பன் கழக பொருளாளர் தங்கப்பாண்டி வரவேற்றார்.

உலக திருக்குறள் கூட்டமைப்பு தூத்துக்குடி மாவட்டத் தலைவர் நன்னெறி ஆசிரியர் பிரபு முன்னிலை வகித்தார்.
“கம்பன் நோக்கில் கல்வி” என்ற தலைப்பில் இன்பத்தமிழ் இளவரசு தீபக் மற்றும் *”அயோத்திய காண்டம்”* பற்றி
கல்லூரிக் கண்ணன் ஆகியோர் சொற்பொழிவாற்றினர்.
இந்நிகழ்வில் கம்பன் கழக தலைவர் துரைப்பாண்டி, கவிமணி அய்யப்பன், கலைவாணர் சந்திரசேகர், ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி,
தங்கமாரியப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பேச்சாளர் மகேந்திரன் நன்றி கூறினார்.








