தமிழக முதலமைச்சராக விஜய் நாளை பதவி ஏற்கிறார்
தமிழக சட்டசபை தேர்தலில் விஜய் தளமையிலான தமிழக வெற்றிக் கழகம் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது,. இந்த நிலையில் இன்று பொறுப்பு கவர்னரரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அப்போது காங்கிரஸ் கட்சியின் ஆதரவு கடிதத்தையும் கொடுத்தார். மெஜாரிட்டியை நிரூபிக்க 2 வாரம் அவகாசம் கேட்டுள்ளார்,.
இந்த நிலையில் 7 ஆம் தேதி நாளை காலை 11:30 மணியளவில் தமிழ்நாடு முதலமைச்சராக விஜய் பதவியேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நாளை பகல் 11:30 மணியளவில் பதவி ஏற்பு விழா நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் ,மும்முரமகா நடைபெற்று வருகின்றன.
விஜய் முதலமைச்சராக் பதவி ஏற்பார். அவருக்கு கவர்னர் பதவி பிரமாணம் செய்து வைப்பார். விஜய் தலைமையிலான அமைச்சரவையில் என் .ஆனந்த் , செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார், திருப்பூர் சத்தியபாமா ,விஜயலட்சுமி ,அருண்ராஜ் உள்ளிட்டோர் இடம் பெற வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
காங்கிரசை சேர்ந்த எம்எல்ஏக்களுக்கும் அமைச்சர் பதவி கிடைப்பது உறுதியாகி இருக்கிறது.
பதவி ஏற்பு நிகழ்ச்சியில், முதலில் விஜய் மேடைக்கு வந்து, ‘சி.ஜோசப் விஜய் எனும் நான்…’ என்று முதலமைச்சருக்கான பதவிப்பிரமாணத்தையும், ரகசியகாப்பு பிரமாணத்தையும் ஏற்றுக்கொள்வார். அதன்பின்னர் ஒவ்வொரு அமைச்சராக வந்து பதவி ஏற்றுக்கொள்வார்கள்.
அதைத்தொடர்ந்து முதலமைச்சராக விஜய் சென்னை கோட்டைக்கு சென்று, அவருக்கென்று தயார்படுத்தப்பட்டுள்ள அறையில் அரசு அலுவல்களை தொடங்குவார். அப்போது அவர் மகளிருக்கு மாதம் 2500 ரூபாய் தரும் திட்டம் என்பன போன்ற தன்னுடைய தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்ட திட்டங்களில் ஒன்றில் உடனே கையெழுத்திட்டு நடைமுறைப்படுத்த ஆணையிடலாம்.
அதே சமயம் அமைச்சர்களும் தலைமைச் செயலகத்திற்கு வந்து தங்களின் அறையில் அமர்ந்து பணிகளை தொடங்குவார்கள்.

. பின்னர் முதல்-அமைச்சர் விஜய், இடைக்கால சபாநாயகரை நியமித்து உத்தரவிடுவார். இடைக்கால சபாநாயகருக்கு கவர்னர் பதவிப் பிரமாணம் செய்து வைப்பார். அதனைத்தொடர்ந்து அனைத்து கட்சிகளிலும் உள்ள வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கு சட்டசபைக்கு வர அழைப்புவிடுக்கப்படும்.
இடைக்கால சபாநாயகர் குறிப்பிட்ட நாளில் அவர்கள் அனைவரும் சட்டசபைக்கு வந்து எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்றுக்கொள்வார்கள், பின்னர் பெரும்பான்மையை நிரூபிக்கும் வாக்கெடுப்பு நடத்தப்படும்.







