• October 21, 2026

சட்டவிரோதமாக விற்பனை: 562 மது பாட்டில்களுடன் ஒருவர் சிக்கினார்

 சட்டவிரோதமாக விற்பனை: 562 மது பாட்டில்களுடன் ஒருவர் சிக்கினார்

கோவில்பட்டி மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் மீகா மற்றும் போலீசார் கயத்தாறு, அய்யனார் ஊத்து பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்,.’

அப்போது, அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை செய்ததில், அவர் கயத்தார் பகுதியைச் சேர்ந்த ராஜா (வயது 35) என்பதும், அவர் அப்பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.
உடனே போலீசார் எதிரி ராஜாவை கைது செய்து அவரிடமிருந்த 562 மது பாட்டில்கள், ரொக்க பணம் ரூபாய் 1,600/- மற்றும் இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

மேலும் பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள் எங்கிருந்து கொண்டு வந்தவை என்பது குறித்து மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *