சங்கரன்கோவிலில் புத்தகத் திருவிழா; ஆயிரம் தலைப்புகளில் 1 லட்சம் புத்தகங்கள்
தமிழ்நாடு புத்தக விற்பனையாளர்கள் சங்கம்,தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்,ரோட்டரி கிளப் ஆப் சங்கரன்கோவில் சார்பில் டிஎன்எஸ்ஆர்எஸ் மஹாலில் புத்தக திருவிழாவின் தொடக்க விழா நடந்தது.
புத்தகத் திருவிழாவில் கலை,இலக்கியம்,வாழ்க்கை வரலாறு ,நாவல்,அறிவியல்,மருத்துவம்,போட்டித் தேர்வு நூல்கள் உள்ளிட்ட ஆயிரம் தலைப்புகளில் 1 லட்சத்திற்கும் அதிகமான புத்தகங்கள் உள்ளன.

மே1ம் தேதி தொடங்கிய புத்தக் திருவிழா 13ம் தேதி வரை நடைபெறும். தினமும் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும் புத்தக கண்காட்சியில் விற்பனையாகும் அனைத்து புத்தகங்களுக்கும் 10% தள்ளுபடி உண்டு. பார்வையாளர்களில் தினசரி ஒரு நபர் தேர்வு செய்யப்பட்டு புத்தகம் பரிசு வழங்கப்படும்.பள்ளி மாணவர்களுக்கான கட்டுரை, ஓவியம், திருக்குறள் எழுதும் போட்டிகள் நடைபெற உள்ளது,
புத்தகத் திருவிழா தொடக்க விழாவிற்கு சங்கரன்கோவில் ரோட்டரி சங்க தலைவர் ராமசுப்பிரமணிய ராஜா தலைமை தாங்கினார், தமிழ்நாடு புத்தக விற்பனையாளர்கள் சங்க நிர்வாகிகள் முத்துமுருகன், ரமேஷ், ராஜபாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழ்நாடு புத்தக விற்பனையாளர்கள் சங்க தலைவர் ரவிவர்மா அனைவரையும் வரவேற்றார். புத்தக கண்காட்சியினை மருத்துவர் வி. எஸ். சுப்புராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பார்வையிட்டார்.

ரோட்டரி சங்க செயலாளர் ஞானமுருகன்,தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க நிர்வாகிகள் தண்டபாணி, செந்தில்வேல், ஈஸ்வர மூர்த்தி,தலைமையாசிரியர் நாராயணன், உள்ளட பலர் கலந்து கொண்டனர். முடிவில் புத்தக விற்பனையாளர்கள் சங்க செயலாளர் கார்த்திக் நன்றி கூறினார்.







