கோவில்பட்டி சித்திரை திருவிழா: அம்மன் வீதி உலா, பக்தி சொற்பொழிவு, கலைநிகழ்ச்சிகள் முழுவிவரம்
கோவில்பட்டி பத்திரகாளி அம்மன் கோவில் சித்திரை திருவிழா வருகிற 4 ந்தேதி திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 15-ந்தேதி வரை விழா நடக்க இருக்கிறது.,
1: வது நாள் (4-ந்தேதி)
1வது நாள் மண்டகப்படிதாரர் நாடார் தேங்காய், பழம், காய்கனி வியாபாரிகள்
இரவு 7மணி: வண்ண ஊர்தியில் வெள்ளி சிம்ம வாகனத்தில் வெள்ளிக்குடையின்கீழ் அம்மன் வீற்றிருந்து சூலாயுதம் ஏந்தி ‘துர்க்கைக் கோலத்தில்”எழுந்தருளி திருவீதி உலா வருதல்.
இரவு 7.25 மணி: திருக்கோவில் .பொன்னம்பல நாடார் கலையரங்கத் பக்தி சொற்பொழிவு நடைபெறும். நிகழ்த்துபவர் : சூரியன் F.M.புகழ் நெல்லை.L.சுப்பிரமணியன் தலைப்பு: “இறைத்தொண்டில் பெண் அடியார்கள்”
இரவு 8.மணி: அடைக்கலம் காத்தான் மண்டபத்தில் திருவனந்தபுரம் M.L.ராஜாவின் ‘கீதாஞ்சலி’ இசைக்குழுவினரின் கச்சேரி நடைபெறும்.,

2 வது நாள் (5-ந் தேதி)
2 வது நாள் மண்டகப்படிதாரர் நாடார் சாக்கு வர்த்தகர்கள்,தரகு, தையல் தொழிலாளர்கள்
இரவு 7 மணி: கஜலட்சுமி வாகனத்தில் வெள்ளிக் குடையின்கீழ் அம்மன் வீற்றிருந்து திருக்கரத்தில் தாமரையுடன் “திருமகள் வடிவத்தில்” எழுந்தருளி திருவீதி உலா வருதல்.
இரவு 7.25 மணி: திருக்கோவில் .பொன்னம்பல நாடார் கலையரங்கத்தில் பக்தி சொற்பொழிவு நடைபெறும். நிகழ்த்துபவர் : ZeeTV புகழ் .ந.விஜயநம்பி தலைப்பு : “ தெய்வம் நமக்கு துணை ”
இரவு 8.00 மணி: அடைக்கலம் காத்தான் மண்டபத்தி மதுரை புகழ் ” பைவ் ஸ்டார் ஆர்க்கெஸ்ட்ரா ” வழங்கும் இன்னிசைக் கச்சேரி நடைபெறும்.
3: வது நாள் (6 ந் தேதி)
3வது நாள் மண்டகப்படிதாரர் நாடார் ஜவுளி & ரெடிமேட் கடை உரிமையாளர்கள்,தையல் கலைஞர்கள்
இரவு 7 மணி: குதிரை வாகனத்தில் வெள்ளிக்குடையின்கீழ் அம்மன் எழுந்தருளி திருவீதி உலா வருதல்,
இரவு 7.25 மணி: திருக்கோவில்.பொன்னம்பல நாடார் கலையரங்கத்தில் பக்தி சொற்பொழிவு நடைபெறும். நிகழ்த்துபவர் : சிவகுமார் சிங்காரவேல் ,தலைப்பு : “ அருள்தரும் அம்பிகை ” ”
இரவு 8.00 மணி: அடைக்கலம் காத்தான் மண்டபத்தில் ” R.P.S.Event ” நடத்தும் கலைநிகழ்ச்சி நடைபெறும்.
4-வது நாள்( 7 -ந் தேதி)
=4வது நாள் மண்டகப்படிதாரர் நாடார் வெற்றிலை பாக்கு, சில்லரை பலசரக்கு வியாபாரிகள்
இரவு 7 மணி: பாற்கடலில் தோன்றிய அற்புதம் காமதேனு வாகனத்தில் வெள்ளிக் குடையின் கீழ் அம்மன் வீற்றிருந்து திருக்கரத்தில் கிளி ஏந்தி “அன்னை மீனாட்சியின்” அற்புதக் கோலத்தில் எழுந்தருளி திருவீதி உலா வருதல்
இரவு 7.25 மணி: திருக்கோவில் .பொன்னம்பல நாடார் கலையரங்கத்தி பக்தி சொற்பொழிவு நடைபெறும். நிகழ்த்துபவர் : சி.தேவி தலைப்பு “ அஞ்சனை மைந்தன் இரவு 8.00 மணி: அடைக்கலம் காத்தான் மண்டபத்தில் சூரியன் F.M.புகழ் சின்னத்தம்பி. L.சுப்பிரமணியன் குழுவினர் வழங்கும் நகைச்சுவை சிந்தனை பட்டிமன்றம் நடைபெறும். தலைப்பு : மனைவிக்கு கணவன் காமெடியனா? கதாநாயகனா?
5 வது நாள் ( 8 -ந்தேதி)
5 வது நாள் மண்டகப்படிதாரர் நாடார் கசாய் வர்த்தகர்கள்
இரவு 7 மணி: அலங்கார ஊர்தியில் காளை வாகனத்தில் வெள்ளிக்குடையின் கீழ் அம்மன் வீற்றிருந்து திருக்கரத்தில் புல்லாங்குழல் ஏந்தி “கண்ணன் இவன்தானோ” என எண்ணவைக்கும் கோலத்தில் எழுந்தருளி திருவீதி உலா வருதல்.
இரவு 7.25 மணி: திருக்கோவில் .பொன்னம்பல நாடார் கலையரங்கத்தில் பக்தி சொற்பொழிவு நடைபெறும். நிகழ்த்துபவர் : கவிஞர், , கல்லூரணி.மு.முத்துமுருகன் தலைப்பு : ” தமிழ் கடவுள் முருகன்
இரவு 8.00 மணி: அடைக்கலம் காத்தான் மண்டபத்தில் கேரளா புகழ் சஜூக்குட்டன் வழங்கும் “கீதாஞ்சலி ”குழுவினரி ஸ்டார் ஷோ நிகழ்ச்சி நடைபெறும்.
6வது நாள்(9 ந்தேதி)
மண்டகப்படிதாரர் நாடார் லாரி, பஸ், மினிபஸ், பல்க், ஸ்பேர் பார்ட்ஸ் உரிமையாளர்கள், புரோக்கர்கள், டிரைவர்கள், மெக்கானிக்குகள்
இரவு 7 மணி: வெள்ளிக்குடையின்கீழ் ஐராவதம் வாகனத்தில் அம்மன் ஈட்டி, கேடயம் ஏந்தி வேட்டைக்குப் புறப்படும் “கொற்றவைக் கோலத்தில்” எழுந்தருளி திருவீதி உலா வருதல்.
இரவு 7.25 மணி: திருக்கோவில் .பொன்னம்பல நாடார் கலையரங்கத்தி டான்ஸ் மாஸ்டர் வர்ண ஸ்ரீ, தேவிபாலாவின் “ஸ்ரீ பாலா நாட்டியப்பு வழங்கும் பரதநாட்டியம் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெறும்.
இரவு 8.00 மணி:அடைக்கலம் காத்தான் மண்டபத்தில் நெல்லை புகழ் கணேஷ் வழங்கும் ‘பரணி” இன்னிசைக்குழுவின் இன்னிசைக்கச்சேரி நடைபெறும்.
நள்ளிரவு 12. மணி: கழுவேற்றம்: அடைக்கலம் காத்தான் மண்டபம் காமராஜா மணிமண்டபம் முன்பு கழுவேற்ற நிகழ்ச்சி நடைபெறும்.

7வது நாள்(10 ந்தேதி)
7வது நாள் மண்டகப்படிதாரர் நாடார் வர்த்தக குமாஸ்தாக்கள்
இரவு 7 மணி: அன்ன வாகனத்தில் வெள்ளிக் குடையின்கீழ் அம்மன் வீற்றிருந்து “அருட்கோலத்தில்” அற்புதக் கோலத்தில் எழுந்தருளி திருவீதி உலா வருதல்
இரவு 7.25 மணி: திருக்கோவில் .பொன்னம்பல நாடார் கலையரங்கத்தில் சிவகாசி புகழ் “சாகர் சங்கீத வித்யாலயா” குழுவினரின் “வீணை கச்சேரி” நடைபெறும்
இரவு 8. மணிக்கு அடைக்கலம் காத்தான் மண்டபத்தில் தென்னாட்டு புகழ் மாஸ்டர் விஜய் வழங்கும் “குட்லக்” குழுவினரின் இன்னிசைக்கச்சேரி நடைபெறும்.
8வது நாள் (11 ந் தேதி)
மண்டகப்படிதாரர் நாடார் மொத்த வியாபாரிகள்
இரவு 7 மணி: மணம் கமழும் வாசமிகு பல வண்ணப்பூக்களால் அலங்கரிக்கப்பட்ட பூப்பல்லக்கில் சூலாயுதம் ஏந்தி சிறப்பான சிகையலங்காரத்துடன் “ஆதிபராசக்தி” திருக்கோலத்துடன் எழுந்தருளி திருவீதி உலா வருதல்
இரவு 7.25 மணி: திருக்கோவில் S.பொன்னம்பல நாடார் கலையரங்கத்தி பக்தி சொற்பொழிவு நடைபெறும். நிகழ்த்துபவர் : சூரியன் F.M. விஜய் T.V புகழ் நெ
6தலைப்பு : “ நம்பினார் கெடுவதில்லை
இரவு 8. மணிக அடைக்கலம் காத்தான் மண்டபத்தில் நெல்லை புகழ் பரணி டான்ஸ் மற்றும் பாடல் குழுவினர் வழங்கும் கலை நிகழ்ச்சி மற்றும் இன்னிசை கச்சேரி நடைபெறும்,
9 வது நாள் (12ந்தேதி)
9வது நாள் மண்டகப்படிதாரர் கோவில்பட்டி இந்து நாடார் தீப்பெட்டி, குச்சி மற்றும் மூலப்பொருட்கள் உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் கூட்டமைப்பு
காலை 9 மணி :பக்தர்கள் தெற்கு நந்தவனத்திலிருந்து “பால்குடம் எடுத்துவருதல்” “
காலை 10மணி, அம்மனுக்கு “பால் அபிஷேகம். தீபாராதனை
மாலை 5 மணி : பெண் பக்தர்கள் “மாவிளக்கு கையில் ஏந்தி நகர்வலம் வருதல்
,மாலை 5.30 மணி:- வேண்டுதல் பூச்சட்டிகள், 21 அக்னி சட்டி, 54 அக்னி சட்டி எடுத்து நகர்வலம் வருதல்
இரவு 7 மணி: வண்ண ஊர்தியில் அம்மன் வெள்ளி சிம்ம வாகனத்தில் வெள்ளிக்குடையின்கீழ் வீற்றிருந்து தங்கக்குடம், வாளி ஏந்தி “தீர்த்தம் எடுக்கு திருக்கோலத்துடன் எழுந்தருளி திருவீதி உலா வருதல்
இரவு 8 மணி: அடைக்கலம் காத்தான் மண்டபத்தில் “நெல்லை புகழ்கவிதா” தொகுத்து வழங்கும் கவிக்குயில் இன்னிசைக்கச்சேரி நடைபெறும்.
பொங்கல் விழா (13-ந் தேதி)
13.05.2026 புதன்கிழமை அதிகாலை தெற்கு நந்தவனம் சென்று புனிதநீர் கொண்டுவந்து தகோவில் முன்பு பொங்கலிடுதல்
மாலை 3. மணி: கோவில் முன்பு மஞ்சள் நீராட்டு விழா நடைபெறும்.
மாலை 6. மணி முளைப்பாரி ஊர்வலத்துடன் அம்மன் திருப்பல்லக்கில் திருக்கோவிலைச் சுற்றி வருதல். ஒளிவிளக்குகளுடன், மேளதாளத்துடன் முளைப்பாரி நந்தவனம் கொண்டு சேர்த்தல்.
காட்சி கொடுத்த கண்கண்ட தெய்வம் காளியம்மன் திருக்கோவிலில் வழக்கமாக நடைபெறும் இரண்டு கால பூஜைகள், மண்டகப்படிதாரர்களின் ‘சிறப்பு அபிஷேக ஆராதனைகள்’ நடைபெறும்.
வில்லிசை நிகழ்ச்சி(14ந்தேதி)
14.5.2026) வியாழக்கிழமை இரவு 9. மணிக்கு திருக்கோவில் பொன்னம்பல நாடார் கலையரங்கத்தில் தென்காசி வெற்றிக்குமார் பரம்பரை ஏழாவது தலைமுறை கலைத்தென்றல் Br.S.புவனா குழுவினரின் வில்லிசை நிகழ்ச்சி நடைபெறும்
திருவிளக்கு பூஜை (15ந்தேதி)
15.5.2026 வெள்ளிக்கிழமை மாலை 6. மணிக்கு 1008 திருவிளக்கு பூஜை ” நடைபெறும். திருருவிளக்கு பூஜை டிக்கெட்டுகள் சங்க அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம்.







