கோவில்பட்டியில் திமுக நிர்வாகி சாக்கு மூட்டையில் கொண்டு சென்ற ரூ.35 லட்சம் பறிமுதல்
கோவில்பட்டி லாயல் மில் காலனியில் பைக்கில் சென்ற வாலிபர் ஒருவரை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தனர்.
அவர் மத்திய ஒன்றிய திமுக இளைஞரணி நிர்வாகிஉத்தரக்குமார் என்பது தெரிய வந்தது.

அவரது பைக்கின் முன்பக்கத்திலிருந்த சாக்கு மூட்டையை பிரித்து பார்த்தபோது அதில் 35 லட்சத்து 72 ஆயிரம் ரூபாய் இருந்தது தெரியவந்தது. இதையெடுத்து போலீசார் பணத்தை பறிமுதல் செய்து தேர்தல் பறக்கும் படையினரிடம் ஒப்படைத்தனர்.
இந்த பணம் வாக்காளர்களுக்கு கொடுக்க கொண்டு செல்லப்பட்டதா? அல்லது வேறு எதுவும் காரணமா என்பது குறித்து திமுக நிர்வாகி உத்தர குமாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.








