திருச்சி அந்தோணியார் தேவாலயத்தில் மண்டியிட்டு விஜய் பிரார்த்தனை
Oplus_16908288
தவெக தலைவர் விஜய் இன்று திருச்சி கிழக்கு தொகுதியில் ரோடு ஷோ மேற்கொண்டார். ரோடு ஷோக்கு இடையே, திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார்.

ஆலயத்தில் மண்டியிட்டு நடந்து சென்று விஜய் பிரார்த்தனை செய்தார். ஆலயத்தில் பிரார்த்தனை செய்து முடித்த பிறகு விஜய் மீண்டும் ரோடு ஷோ புறப்பட்டார்.
விஜய்யை பார்க்க வழிநெடுக தவெக தொண்டர்கள் உற்சாகமாக திரண்டு இருந்தனர்.
விஜய்யை வரவேற்று பூக்களையும், பரிசு பொருட்களையும் வீசினர். விஜய்யின் ரோடு ஷோவால் திருச்சியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் போட்டியிடுவதால் இந்த தொகுதி பெரும் கவனத்தை பெற்றுள்ளது. திமுக சார்பில் இந்த தொகுதியில் இனிகோ இருதயராஜ் போட்டியிடுகிறார்.








