ஜூனியர் ஆண்கள் ஆக்கி அணி பயிற்சி முகாமுக்கு 21 வீரர்கள் தேர்வு
ஆக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி ஜூனியர் ஆண்கள் ஆக்கி அணி தேர்வு கடந்த வாரம் நடைபெற்றது இந்தத் தேர்வில் மொத்தம் 34 வீரர்கள் கலந்து கொண்டனர்
இதிலிருந்து பயிற்சி முகாமிற்கு 21 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர் தேர்வு செய்யப்பட்ட வீரர்கள் பின்வருமாறு

கோல் கீப்பர் : முத்து ராஜேஷ், ஈஸ்வர்
தடுப்பாட்டக்காரர்: முருகேஷ், நவீன், ராகுல் , கௌதம், பிரியன், தனுஷ் பாண்டியன், கௌதம், அருண், கிரி , நவீன்,
முன்கள ஆட்டக்காரர்கள்: விஷால், சுகுமார், சிபி, பூல் பாண்டி , சுந்தர் அஜித், முகுந்தன் ,விஜய், கபிலன், சூர்யா
தேர்வு செய்யப்பட்ட வீரர்கள் செவ்வாய்க்கிழமை காலை 6:30 மணிக்கு கோவில்பட்டி செயற்கைப்புல் ஆக்கி மைதானத்தில் நடைபெறும் பயிற்சி முகாமில் கலந்து கொள்ள அழைக்கப்படுகிறார்கள்.
பயிற்சி முகாம் தொடர்ந்து 27 ஆம் தேதி காலை வரை நடைபெறும் இதிலிருந்து 18 பேர் கொண்ட தூத்துக்குடி மாவட்ட ஜூனியர் ஆக்கி அணி தேர்வு செய்யப்பட்டு கோயம்புத்தூரில் நடைபெறும் ஜூனியர் மாநில ஆக்கி சாம்பியன் போட்டியில் 28ஆம் தேதி கலந்து கொள்ள மாவட்ட ஆக்கி கழகத்தின் சார்பாக அழைத்துச் செல்லப்படுவார்கள்








