கோவில்பட்டியில் வந்தே பாரத் ரெயில் நின்று செல்ல பரிந்துரை: அரசியல் கட்சியினருக்கு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் தங்கமணி நன்றி
சென்னை எழும்பூா் – திருநெல்வேலி இடையே வந்தே பாரத் ரெயில் கடந்த 9 ம் தேதி முதல் கோவில்பட்டி ரெயில் நிலையத்தில் 2 நிமிடம் நின்று செல்கிறது.
திருநெல்வேலியிலிருந்து .காலை 6.05 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் ரெயில்(20666) 6.38 மணிக்கு கோவில்பட்டி ரெயில் நிலையம் வந்து 6.40 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தை மதியம் 1.55 மணிக்கு சென்றடையும்.
மறுமார்க்கமாக சென்னையிலிருந்து மதியம் 2.45 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் ரெயில் (20665) இரவு 9.23 மணிக்கு கோவில்பட்டி ரெயில் நிலையம் வந்து , 9.25 மணிக்கு திருநெல்வேலி புறப்பட்டு செல்லும்.

திருநெல்வேலி சென்னை வந்தே மாதத்தில் கோவில்பட்டியில் நின்று செல்ல வேண்டுமென்று கோரிக்கையை கனிமொழி எம்பி, கடம்பூர் ராஜு எம்எல்ஏ, மதிமுக பொது செயலாளர் வைகோ, முதன்மை செயலாளர் துரை வைகோ எம்பி உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் வலியுறுத்தியதன் அடிப்படையில் ரெயில்வே வாரியம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
இதனால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சிக்கு உள்ளாகி உள்ளனர். இந்த நிலையில் கோவில்பட்டியில் வந்தே பாரத் ரெயில் நின்று செல்ல பரிந்துரை செய்த அனைத்து கட்சி நிர்வாகிகளுக்கும்,பொது நல அமைப்பினருக்கும் தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கோவில்பட்டி மாவட்ட தலைவர் பி. தங்கமணி நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.







