கோவில்பட்டி அருகே பயணியர் நிழற்குடைகள், பல்நோக்கு மண்டபம் திறப்பு
கோவில்பட்டி அருகே குருவிகுளம் ஊராட்சி ஒன்றித்துக்கு உட்பட்ட ஊராட்சிகளில் வைகோ எம்.பி. நிதி, ஒன்றிய பொது நிதி மற்றும் 15-வது மானியக்குழு நிதி ஆகியவை மூலம் பல்வேறு நலத்திட்ட பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன,
சித்திரம்பட்டி ஊராட்சியில் ரூ.5.50 லட்சம், லட்சுமியாபுரம் கிராமத்தில் ரூ.6 லட்சம் செலவில் பயணிகள் நிழற்குடை, பழைய அப்பநேரி அருந்ததியர் பகுதி, கொம்மன்குளம் கிராமத்தில் ரூ.15 லட்சத்தில் வீடுகளுக்கான குடிநீர் வசதி, புது அப்பநேரியில் ரூ.21.70 லட்சத்தில் பல்நோக்கு மண்டபம், இளையரசனேந்தலில் ரூ.17 லட்சம், தர்மத்துப்பட்டியில் ரூ.8 லட்சம் செலவில் கட்டப்பட்ட நியாய விலைக்கடை கட்டிடம், பிள்ளையார்நத்தம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.12 லட்சத்தில் கட்டப்பட்ட கலையரங்கம், முக்கூட்டுமலையில் ரூ.8 லட்சத்தில் மகளிர் உடை மாற்றும் அறை ஆகியவற்றின் திறப்பு விழா நேற்று நடைபெற்றது,
மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ எம்.பி. தலைமை தாங்கி , புதிய கட்டிடங்களை திறந்து வைத்து பார்வையிட்டார்.

பழைய அப்பநேரி கிராமத்தில் தூய்மை தொழிலாளரின் மனைவி லட்சுமி என்பவர், துரை வைகோ எம்.பி.யிடம், எங்களுக்கு கலைஞர் கனவு இல்லத் திட்டத்தில் வீடு கட்டிக் கொடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தார். இதற்கான உரிய நடவடிக்கையை உடனே எடுத்தார்,.
இந்த நிகழ்ச்சிகளில், சட்டப்பேரவை உறுப்பினர்கள் ராஜா, சதன் திருமலைக்குமார், மதிமுக மாநிலத் துணைச் செயலாளர் தி.மு.ராஜேந்திரன், மாவட்ட செயலாளர் ஆர். எஸ்.ரமேஷ் ,மாநில ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர் விநாயகா ரமேஷ், ஒன்றிய செயலாளர்கள் ராஜகோபால், சரவணன், மாநில தீர்மானக்குழு உறுப்பினர் முத்துச்செல்வம்,நகர செயலாளர் பால்ராஜ், மாநில கலைப்பிரிவு கோடையிடி ராமச்சந்திரன், ஊராட்சி மன்ற தலைவர் சுரேஷ், மாவட்ட கவுன்சிலர் தேவி ராஜகோபால், ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் சுகுணா கனகராஜ் மற்றும் மதிமுக, திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.







