கோவில்பட்டி வேலாயுதபுரத்தில் மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகள்

கோவில்பட்டி வேலாயுதபுரம் பெருந்தலைவர் காமராஜர் கல்வி வளர்ச்சி குழு சார்பில் காமராஜரின் 123 வது பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கான பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் மற்றும் பொது மக்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இவ்விழாவிற்கு வேலாயுதபுரம் நாடார் உறவின் முறைச்சங்க தலைவர் தர்மராஜ் நாடார் தலைமை தாங்கினார்.. காமராஜரின் உதவியாளர் சண்முகராஜா, முன்னாள் உறவின்முறைச் சங்க செயலாளர் வைரவன், ஆகியோர் காமராஜரின் உருவபடத்தை திறந்து வைத்தனர்.

சிறப்பு விருந்தினராக ஹோமியோபதி மருத்துவர் ராமசாமி, ராகவேந்திரா சேவா அறக்கட்டளை நிறுவனர் சீனிவாசன், ஆகியோர் கலந்து கொண்டு மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு பரிசுகளை வழங்கி சிறப்பித்தனர்.
நாடார் உறவின்முறை சங்க முன்னாள் தலைவர் சேதுரத்தினம், தொழிலதிபர்கள், நடராஜன், கண்ணன், ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நிகழ்ச்சிக்கான ஒருங்கிணைப்பாளராக பெருந்தலைவர் காமராஜர் கல்வி வளர்ச்சி குழு நிர்வாகிகள், 5வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் லவராஜா, பெருந்தலைவர் காமராஜர் கல்வி வளர்ச்சி குழு தலைவர் ராஜா, துணைத் தலைவர் மணிகண்டன், செயலாளர் முருகன், துணைச் செயலாளர் சதீஷ்குமார், பொருளாளர் சேர்முகசாமி ஆகியோர் செயல்பட்டனர்.

தொழிலதிபர் அமலி பிரகாஷ், 22வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் ஜேஸ்மின் லூர்து மேரி ஆகியோர் குத்து விளக்கை ஏற்றி வைத்தனர். முன்னாள் சங்கத் தலைவர் செல்வமணி நாடார், 14 வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் தவமணி, ஓய்வு பெற்ற சுங்கத்துறை கண்காணிப்பாளர் சாலமன், தொழிலதிபர் சுரேஷ், துணைத் தலைவர் ராஜேந்திரன், செயலாளர் மகேந்திரன், துணைச் செயலாளர் ஹரிராம் சேட், பொருளாளர் பெரியசாமி, நிர்வாக குழு காளிதாஸ், மணிகண்டன், சங்கர், ஆனந்த், சேர்மராஜ், ஆகியோர் முன்னிலை வகித்தனர்,
கவுரவ ஆலோசகர்கள் பாலசுந்தரபாண்டி, திருமணி, கேசவன், கற்குவேல், கருப்பசாமி, மாரிச் செல்வம், மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் சுந்தர்ராஜ், கார்த்திக், சுமன், ஜோசப் ஆனந்த், உட்பட பலர் கலந்து கொண்டனர்முடிவில் ராமதாஸ் நன்றி கூறினார்.








1 Comment
வணிகர்கள் சம்பந்தப்பட்ட செய்திகள்சமுதாய செய்திகள் பொதுமக்கள் செய்திகள் போன்றவை ஒளிபரப்பு செய்யும் இந்த 96 சேனலில் நடத்தி வரும் உங்களுக்கு எங்கள் தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பாக வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்