திருவள்ளுவர் மன்ற ஆய்வுப்பொழிவு கூட்டம்

கோவில்பட்டி திருவள்ளுவர் மன்றத்தில் 54-ம் ஆண்டு திங்கள் ஆய்வுப்பொழிவு நேற்று நடந்தது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்க மாவட்டத் தலைவர் ராமசுப்பு தலைமை தாங்கினார்,
ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் இந்திராணி முன்னிலை வகித்தார். திருவள்ளுவர் மன்ற செயலாளர் நம்சீனிவாசன் வரவேற்றார். துணைத் தலைவர் திருமலைமுத்துச்சாமி தொகுத்து வழங்கினார்.

பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரி நாட்டார் வழக்காற்றியல் துறை உதவிப் பேராசிரியர் பீட்டர் ஆரோக்கியராஜ் கலந்து கொண்டு “ஏடறியா தமிழர்கள் தந்த இலக்கியத்தின் விழுமியங்கள்” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். தொடர்ந்து “தீராக்காதல்” என்ற தலைப்பில் கருத்துரை வழங்கினார்.

தமிழ் ஆர்வலர் சுப்புலட்சுமி, காமராஜர் மெட்ரிக் பள்ளி முதல்வர் பிரபு ஆகியோர் கருத்துரை வழங்கினர். கோவில்பட்டி திருவள்ளுவர் மன்ற தலைவர் கருத்தப்பாண்டி நன்றி கூறினார்.







