சிட்டி கிரிக்கெட் லீக் தொடர்: கோவில்பட்டி லயன்ஸ், பவர் ஸ்டார் அணிகள் வெற்றி
கோவில்பட்டி சிட்டி கிரிக்கெட் அசோசியேசன் மற்றும் பகடா ஸ்போர்ட்ஸ் இணைந்து கோவில்பட்டி மற்றும் சுற்று வட்டார கிரிக்கெட் வீரர்களை ஊக்குவிப்பதற்காக கோவில்பட்டி சிட்டி கிரிக்கெட் லீக் தொடர் வருடம் தோறும் நடத்தப்படுகிறது.
இந்த வருடத்திற்கான prestigious methodious trophy க்கான போட்டிகள் இன்று(27.7.2025) தொடங்கின.

இந்த போட்டிகளில் கோவில்பட்டி விளாத்திகுளம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிகளை சார்ந்த 8அணிகள் கலந்து கொண்டு விளையாடுகிறது. அனைத்து போட்டிகளும் 50 ஓவர் கொண்டதாக வெள்ளை நிற கிரிக்கெட் பந்தில் நடத்தப்படுகிறது.
இன்று நடந்த முதல் ஆட்டத்தில் கோவில்பட்டி லயன்ஸ் மற்றும் மேவரிக்ஸ் கிரிக்கெட் அணியினர் மோதினர்.
முதலில் பேட்டிங் செய்த கோவில்பட்டி லயன்ஸ் அணியினர் 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 296 ரன்கள் எடுத்தனர். அடுத்து 297 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று நிலையில் களம் இறங்கிய மேவரிக்ஸ் கிரிக்கெட் அணியினர் 194 ரன்களில் ஆட்டம் இழந்து தோல்வி அடைந்தனர்.

இப்போட்டியின் ஆட்ட நாயனாக பாலா தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மற்றொரு போட்டியில் கோவில்பட்டி பவர் ஸ்டார் அணியினர் 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 339 ரன்கள் எடுத்தனர்.
பின்னர் 340 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களம் இறங்கிய விளாத்திகுளம் தமிழ் கோல்ட் கிரிக்கெட் அணியினர் 152 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.ஆட்ட நாயகனாக பிரவீன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.







