மாநில ஜூனியர் ஆக்கி: தூத்துக்குடி மாவட்ட அணி கால் இறுதிப் போட்டிக்கு தகுதி

தூத்துக்குடி வ உ சி துறைமுக ஆணையம் கோப்பைக்கான ஜூனியர் ஆண்கள் மாநில அளவிலான ஆக்கி போட்டி கோவில்பட்டியில் நடந்து வருகிறது.
ஆக்கி யூனிட் ஆஃப் தமிழ்நாடு மற்றும் ஆக்கி யூனிட் ஆஃப் தூத்துக்குடி இணைந்து நடத்தும் இப்போட்டி கோவில்பட்டி நாடார் மேல்நிலைப்பள்ளியில் இரண்டு ஆக்கி மைதானங்களில் நடந்து வருகிறது. இன்று வியாழக்கிழமை இரண்டாம் நாள் ஆட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட அணி கால் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது;
காலையில் நடந்த போட்டியில் ராமநாதபுரம் மாவட்ட அணி 3-0 என்ற கோல் கணக்கில் கடலூர் மாவட்ட அணியை தோற்கடித்தது, அடுத்து சிவகங்கை மாவட்ட அணி 8-0 என்ற கோணத்தில் கன்னியாகுமரி மாவட்ட அணியை வீழ்த்தியது, வேலூர் மாவட்ட அணி 1-0 என்ற கோல் கணக்கில் தேனி மாவட்ட அணியை வென்றது,

ராமநாதபுரம் மாவட்ட அணி 14-0 என்ற கோல் கணக்கில் ராணிப்பேட்டை மாவட்ட அணியை தோற்கடித்து வெற்றி பெற்றது தூத்துக்குடி மாவட்ட அணி 6-0 என்ற கோல் கணக்கில் நாகப்பட்டினம் மாவட்ட அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது மதுரை மாவட்ட அணி 3-0 என்ற கோல் கணக்கில் திருநெல்வேலி மாவட்ட அணியை வென்றது.
விழுப்புரம் மாவட்ட அணி 9-0 என்ற கோல் கணக்கில் தென்காசி மாவட்ட அணியை வெற்றி பெற்றது. கிருஷ்ணகிரி மாவட்ட அணி 4-0 என்ற கோல கணக்கில் காஞ்சிபுரம் மாவட்ட அணியை வீழ்த்தியது, சேலம் மாவட்ட அணி 2-1 என்ற கோல் கணக்கில் திருவள்ளுவர் மாவட்ட அணியை தோற்கடித்தது.

நாகப்பட்டினம் மாவட்ட அணி 3-0 கணக்கில் கரூர் மாவட்ட அணியை வெற்றி பெற்றது விருதுநகர் மாவட்ட அணி 3-1 என்ற கோல் கணக்கில் திருவாரூர் மாவட்ட அணியை தோற்கடித்தது. திருவண்ணாமலை மாவட்ட அணி 3-0 கோல் கணக்கில் புதுக்கோட்டை மாவட்ட அணியை தோல்வி அடைய செய்தது.
திருச்சி -செங்கல்பட்டு அணிகள் தலா ஒரு கோல் போட்டு சம நிலையில் முடிந்தது சென்னை மாவட்ட அணி 4-0 என்ற கோல் கணக்கில் விழுப்புரம் மாவட்ட அணியை வெற்றி பெற்றது. கோயம்புத்தூர் மாவட்ட அணி 9-4 என்ற கோல் கணக்கில் கிருஷ்ணகிரி மாவட்ட அணியை வீழ்த்தியது.
நாளை மாலை வரை நாடார் மேல்நிலைப்பள்ளி ஆக்கி மைதானத்தில் லீக் போட்டிகள் நடைபெறும் நாளை மறுநாள் கிருஷ்ணா நகரில் அமைந்துள்ள செயற்கைப்புல் ஆக்கி மைதானத்தில் கால் இறுதிப் போட்டிகளும், ஞாயிற்றுக்கிழமை அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டியும் நடைபெறும்







