கோவில்பட்டி புனித சூசையப்பர் ஆலய அர்ச்சிப்பு விழா;ஆயர் அந்தோனிசாமி அடிகளார் பங்கேற்பு



கோவில்பட்டி புனித சூசையப்பர் ஆலய அர்ச்சிப்பு விழா நடைபெற்றது இவ்விழாவிற்கு வருகை தந்த பாளைமறை மாவட்ட ஆயர் அந்தோனிசாமி அடிகளார், மெயின் ரோட்டில் அமைந்துள்ள காமராஜர் சிலை அருகில் இருந்து மேள தாளங்கள் முழங்க இறை மக்கள் பவனியாக ஆலயத்திற்கு அழைத்து வந்தனர்

ஆலயத்தில் ஆயருக்கு கும்ப ஆரத்தி எடுத்து வரவேற்று சிறப்பு செய்யப்பட்டது.
ஆலய கல்வெட்டினை ஆயர் திறந்து வைத்து ரிப்பன் வெட்டி ஆலயத்தை திறந்து வைத்து ஆலயத்தை தீர்த்தம் தெளித்து அர்ச்சிக்கப்பட்டு ஆலயத்தை புனித படுத்தினார்கள் பின் ஆயர் தலைமையில் பாளை மறைமாவட்ட நிர்வாக அருட்தந்தையர்கள் மற்றும் மறை மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து பங்கு தந்தையர்களும் இணைந்து திருப்பலி நிறைவேற்றி இவ்வாலயம் மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டது.

இவ்வாலய கட்டிட பணி செய்த பணியாளர்களுக்கு புத்தாடை வழங்கி சன்மானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோவில்பட்டி பங்குத்தந்தையர்கள் சார்லஸ் அடிகளார், அருள்ராஜ் அடிகளார்,மற்றும் அருட்சகோதரிகள் செய்திருந்தனர் நிறைவில் இறை மக்கள் அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது







