கோவில்பட்டியில் த.வெ.க. சார்பில் நலத்திட்ட உதவிகள்
கோவில்பட்டியில் தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு கிழக்கு நகர த.வெ.க. சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி புதுக்கிராமத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடந்தது.

மாவட்ட பொருளாளர் செல்வின் சுந்தர் தலைமை தாங்கினார். நகர நிர்வாகி சுரேஷ் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் ஏழை எளிய மாணவ- மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை, சீருடை உள்ளிட்ட கல்வி உபகரணங்களை வடக்கு மாவட்ட இளைஞரணி பொறுப்பாளர் சுமங்கலி ராஜா வழங்கினர்.

நிகழ்ச்சியில் மகளிரணி செல்வி, இளம் பெண்கள் பாசறை அன்னலட்சுமி, மாவட்ட நிர்வாகிகள் மதன்ராஜா, செண்பகராஜ், வழக்கறிஞர் அணி ராஜேந்திரசிங், இளைஞர் அணி நிர்வாகிகள் செந்தில்குமார், ராமமூர்த்தி, நகர நிர்வாகிகள் அழகிரி, மாடசாமி, வார்டு செயலாளர்கள் முனியசாமி, முத்துக்கனி, இந்திரஜித் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கிழக்கு நகர செயலாளர் ஆரோக்கியராஜ் செய்திருந்தார்.







