நெல்லையில் திமுக பாக நிலை முகவர்கள் ஆலோசனை கூட்டம்; கனிமொழி எம்பி., அமைச்சர் நேரு பங்கேற்பு

பாளையங்கோட்டை மற்றும் திருநெல்வேலி சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய நெல்லை மத்திய மாவட்ட தி.மு.கழகம் சார்பில், இன்று நெல்லையில் பாக நிலைமுகவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்பி கலந்து கொண்டார். தி.மு.க அரசின் தொடர் வெற்றிக்கு களத்தில் உழைத்திட ஆயத்தமாகயிருக்கும் பாக நிலைமுகவர்களிடம் வரவிருக்கும் தேர்தலுக்கானப் பணிகள் குறித்து ஆலோசனைகள் வழங்கினார்.

கூட்டத்தில் திமுக முதன்மைச் செயலாளர், அமைச்சர் கே என் நேரு, நெல்லை மத்திய மாவட்டச் செயலாளர் அப்துல் வஹாப் எம் எல் ஏ.,நெல்லை கிழக்கு மாவட்டச் செயலாளர் ஆவுடையப்பன், முன்னாள் அமைச்சர் மைதீன் கான், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சத்யானந்த், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் ஏ எல் எஸ் நெல்லை, மாலை ராஜா, நெல்லை மாநகராட்சி ராமகிருஷ்ணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.







