எட்டயபுரம் பாரதியார் நினைவு இல்லத்தை சீரமைக்க வேண்டும்; இந்து முன்னணி கோரிக்கை
தூத்துக்குடி மாவட்ட இந்து முன்னணி செயலாளர் கே.எஸ்.ராகவேந்திரா சார்பில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரத்தை சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர் சுப்பிரமணிய பாரதியார் நினைவு இல்லம் 1973 ஆம் ஆண்டு அன்றைய மூதல் அமைச்சராக இருந்த கருணாநிதி , சுதந்திர போராட்ட வீரர் பாரதியார் பிறந்த இல்லத்தை அரசு சார்பில் விலைக்கு வாங்கி அதை நினைவு இல்லாமல் திறந்து வைத்தார்

அன்று முதல் சுற்றுலா பயணிகள் மற்றும் மாணவ, மாணவிகள் நினைவு இல்லாததை பார்வையிட்டு வருகிறார்கள். இந்த நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு பாரதியார் இல்லத்தின் முன்கூரை கனமழை காரணமாக இடிந்து விழுந்து.
ஓரிரு நாளில் இந்த இல்லத்தை சீரமைக்க ஏற்பாடுகள் நடந்தது. இதற்கான நிதி ஒதுக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால் இதுவரை எந்த ஒரு பராமரிப்பு பணியும் செய்யப்படாமல் இருக்கிறது.

இது மன வேதனை அளிக்கிறது ஆகையால் மாவட்ட ஆட்சித் தலைவர் இதில் கவனம் செலுத்தி பழுதடைந்து காணப்படும் பாரதியார் நினைவு இல்லத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.







