டி.என்.பி.எஸ்.சி.குரூப் 4 : கட்டணமில்லா நேரடி மாதிரி தேர்வுகள் தூத்துக்குடியில் நடக்கிறது
தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம்.வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறி இருப்பதாவது:-
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 -2025 தேர்வுக்கான மாநில அளவிலான கட்டணமில்லா நேரடி (ஆப் லைன் ) மாதிரி தேர்வுகள் மூன்றுகட்டமாக 21.6.25, 28.6.25, 5.7.25 ஆகிய தேதிகளில் தூத்துக்குடி மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் நடத்தப்பட உள்ளது.
முதலாவது மாதிரி தேர்வு வருகிற சனிக்கிழமை (21.6.2025) காலை 10 மணி முதல் 1 மணி வரை தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறும்.
இந்த மாதிரி தேர்வில் கலந்து கொள்பவர்களுக்கு Question Paper and OMR Sheet வழங்கப்படும். இந்த நேரடி மாதிரி தேர்வில் கலந்து கொள்ள விரும்பும் போட்டித் தேர்வர்கள் கீழ்க்கண்ட Google படிவத்தை 20.6.2025 மாலை 5 மணிக்குள் பூர்த்தி செய்யவும். .
மேலும் தகவலுக்கு 0461-2003251 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
இவ்வாறு செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளது,







