• June 13, 2025

தூத்துக்குடியில் நெய்தல் கலைத் திருவிழா; நாளை தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது

 தூத்துக்குடியில் நெய்தல் கலைத் திருவிழா; நாளை தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது

தமிழர்களின் பண்பாடு, கலை, நாகரிகம் போன்றவற்றைப் பறைசாற்றும் வகையில் கனிமொழி  எம். பி. முன்னெடுப்பில் தூத்துக்குடியில் நெய்தல் கலைத்திருவிழா நாளை 13ஆம் தேதி தொடங்கி 15ஆம் தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது.

தூத்துக்குடி வ.உ.சி கல்லூரி மைதானத்தில் நடைபெறும் நெய்தல் கலைத் திருவிழாவில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து 300க்கும் மேற்பட்ட மண் சார்ந்த கலைஞர்கள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்த உள்ளனர். இந்த விழா மூன்று நாட்களும் தினசரி மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெறும்.

 

கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், தேவராட்டம், பறையாட்டம், குச்சியாட்டம், துடும்பாட்டம், ஜிம்பளா மேளம், பொய்க்கால் குதிரை, கிராமிய நிகழ்ச்சி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

நெய்தல் திருவிழாவின் ஒரு பகுதியாகத் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதியைச் சேர்ந்த பாரம்பரிய உணவு வகைகளையும் அறிந்து கொள்ளும் வகையில் 20க்கும் மேற்பட்ட அரங்குகள் காட்சிப்படுத்தப்பட உள்ளது.

முதல் நாளான்று ( 13ம் தேதி )தூத்துக்குடி மாவட்ட அரசு இசைப் பள்ளி – மங்கல இசை, தொடக்க விழா, சமர் கலைக்குழு, அபிநயா நிருத்தாலய நடன பள்ளியின் பரதநாட்டியம், பால் ஜேக்கப்பின் பங்கி போதி – சென்னை சங்கமத்தின்(2025 ), தொடக்க விழா இசை, சோல்டவுட் இசைக்குழு – ஒளி இசை இசைக்குழு ஆகிய கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.

இரண்டாம் நாளான  14ம் தேதி தூத்துக்குடி தமிழன்டா கலைக்குழு, வள்ளியூர் அபிநயகீதம் பல்சுவை கலை நிகழ்ச்சி, குமார ராமன் தேவராட்டம் கலைக்குழு, ஜமீன் கோடாங்கிப்பட்டி, கொங்கு பண்பாட்டு மையம் – பெருஞ்சலங்கையாட்டம், விழுப்புரம் மாலன் மாற்றுத்திறனாளிகள் மலர் கம்பம் குழு, காஞ்சிபுரம் விவேகானந்தா கிராமிய கலைக்குழு, சூப்பர் சிங்கர் ஷாம் விஷாலுடன் இணைந்து மெட்ராஸ் சந்திப்பு (ஜங்ஷன்) இசைக்குழு – ஒளி இசை இசைக்குழு ஆகிய கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.

மூன்றாம் நாளான 15ம் தேதி தூத்துக்குடி மாவட்ட அரசு இசைப் பள்ளி – மங்கல இசை மற்றும் நடனம், நெய்தல் கலைக்குழு – பல்வகை நாட்டுப்புற இசை, அந்தியூர் கலைவாணர் பெருமுரசு கலைக்குழு, தூத்துக்குடி உவரி களியல் கலைக்குழு,  உருபாணர் – பண்டைய நாட்டுப்புற இசைக்கருவிகள் இசைக்குழு – நாட்டுப்புற பாடகர் மார்லி அந்தோணியின் நிகழ்ச்சி – நாட்டுப்புற மற்றும் ஒளி இசை இசைக்குழு – அந்தோணிதாசன் ஆகிய கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *