கோவில்பட்டியில் இலவச ஆக்கி பயிற்சி முகாம்
கோவில்பட்டி வ உ சி அரசு மேல்நிலைப்பள்ளி ஆக்கி மைதானத்தில் ராஜீவ் காந்தி விளையாட்டுக் கழகம் சார்பாக கோடைகால இலவச ஆக்கி பயிற்சி முகாம் நடைபெற்றது.
கடந்த மே 10ம் தேதி முதல் பயிற்சி முகாம் தொடர்ந்து காலையும் மாலையும் நடைபெற்று இன்று 25-ந் தேதி முடிவடைந்தது.

இந்த பயிற்சி முகாமில் 60 மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர் பயிற்சி முகாமுக்கு தினமும் ஒரு சிறப்பு அழைப்பாளர்களை அழைத்து மாணவ மாணவிகளுக்கு பயிற்சி கொடுத்தனர்
முன்னாள் இந்திய ஆக்கி வீரர்கள் அஸ்வின், மாரீஸ்வரன், கோவில்பட்டி சிறப்பு விளையாட்டு விடுதி ஆக்கி பயிற்சியாளர் முத்துக்குமார், மனநல நிபுணர் பாலாஜி, கோல் கீப்பர் சிறப்பு பயிற்சியாளர் பொன்ராஜ், முன்கல ஆட்டக்காரருக்கான சிறப்பு பயிற்சியாளர் ராணுவ வீரர் தனசேகரன், தடுப்பு ஆட்டக்காரர்களுக்கான சிறப்பு பயிற்சியாளர் காளிதாஸ் ஆகியோர் இந்த பயிற்சியை அளித்தனர்,.

, தினமும் காலையும் மாலையும் பயிற்சி முடிந்த பின் மாணவ மாணவிகளுக்கு பால், முட்டை, தானியங்கள், என இயற்கை ஆரோக்கிய சிற்றுண்டிகளை மாணவ மாணவிகளுக்கு வழங்கினர் .பயிற்சி முகாமில் கலந்து கொண்ட மாணவ மாணவிகளுக்கு விக்டரி ஸ்போர்ட்ஸ் அகாடமியின் நிறுவனர் தணிகை வேலன் சீருடைகளை வழங்கி சிறப்பித்தார்.
இன்று நடைபெற்ற பயிற்சி முகாமின் நிறைவு விழாவில் இந்திய ஆக்கி வீரர் கார்த்தி கலந்து கொண்டு பயிற்சி முகாமில் கலந்து கொண்ட மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ், சீருடைகளை , வழங்கினார்.

ஆக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி பொறுப்பாளர்கள் குரு சித்திர சண்முக பாரதி, காளிமுத்து பாண்டியராஜா, மாரியப்பன், சுரேஷ்குமார், மோகன் உள்ளிட்டோர் விழாவில் கலந்துகொண்டனர்
பயிற்சி முகாமுக்கான ஏற்பாடுகளை ராஜீவ் காந்தி விளையாட்டு கழக துணைச் செயலாளர் வேல்முருகன் , சதீஷ், பிரேம் ஆகியோர் செய்திருந்தனர்








