• May 26, 2025

உலக அழகிப் போட்டியில் இருந்து விலகிய இங்கிலாந்து அழகி பகீர் குற்றச்சாட்டு

 உலக அழகிப் போட்டியில் இருந்து விலகிய இங்கிலாந்து அழகி பகீர் குற்றச்சாட்டு

தெலங்கானா தலைநகர் ஐதராபாத்தில் உலக அழகிப் போட்டி நடந்து வருகிறது. இந்நிலையில் போட்டியாளர்கள் கண்ணியக் குறைவாக நடத்தப்படுவதாக கூறி இங்கிலாந்து அழகி மில்லா மேகி போட்டியில் இருந்து விலகி உள்ளார்.

மே 7 ஆம் தேதி வந்தடைந்த மில்லா, 16 ஆம் தேதியே இங்கிலாந்துக்கு திரும்பிவிட்டார். மில்லாவுக்கு பதிலாக இங்கிலாந்து நாட்டின் இரண்டாவது அழகியான சார்லோட் கிராண்ட் போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

போட்டி தொடர்பாக அந்நாட்டில் நேர்காணலில் பேசிய மில்லா மேகி கூறியதாவது:-

 “போட்டியாளர்கள் 24 மணிநேரமும் ஒப்பனையுடனும், கண்கவர் ஆடைகளுடனும்தான் இருக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தினர்.
தொடர்ந்து, போட்டியில் 6 விருந்தினர்கள் கொண்ட ஒவ்வொரு மேசையிலும் 2 பெண்கள் ஒதுக்கப்பட்டனர். இரவு முழுவதும் அவர்களை மகிழ்விக்கவே, நாங்கள் அமர்த்தப்பட்டோம்.


வித்தைக் காட்டும் குரங்குகளைப்போல அங்கு அமர்ந்திருந்தோம். அவர்களின் பொழுதுபோக்குக்காக நாங்கள் சுரண்டப்படுவது ஏற்றுக்கொள்வதாய் இல்லை.

உலக அழகிப் பட்டத்துக்கென ஒரு தனிமதிப்பு இருக்க வேண்டும். ஆனால், அங்கு நான் ஒரு விலைமாதுவாக உணர்ந்தேன். இதுபோன்ற சூழ்நிலைக்கு தள்ளப்படுவேன் என்று ஒருபோதும் நினைக்கவில்லை”

இவ்வாறு அவர்  தெரிவித்தார்.

மில்லாவின் குற்றச்சாட்டை மறுத்த மிஸ் வேர்ல்டு அமைப்பு, ஆதாரமற்ற, பொய்க் குற்றச்சாட்டுகளை மில்லா பரப்பி வருகிறார் என்றும் குடும்ப சூழ்நிலையை கூறி அவர் விலகியதகவும் தெரிவித்தது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *