கோவில்பட்டியில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டி;கோவையைச் சேர்ந்தவர் முதலிடம்

போதை பொருள் இல்லாத நாட்டை உருவாக்க வேண்டி கோவில்பட்டி மாராத்தான் என்ற பெயரில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வுக்காக கோவில்பட்டி ஜே சி ஐ விக்டரி கிங்ஸ் மற்றும் பகடா ஸ்போர்ட்ஸ் சார்பில் மாரத்தான் போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கோவில்பட்டி அருகே இனாம் மணியாச்சி பகடா ஸ்போர்ட்ஸ் மைதானத்திற்கு முன்பு மாரத்தான் போட்டியை கோவில்பட்டி டிஎஸ்பி ஜெகநாதன் தொடங்கி வைத்தார்

இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி கேரளா கர்நாடக மாநிலங்களை சேர்ந்தவர்கள் என 500 பேர் பங்கேற்றனர். 5 கிலோமீட்டர் தூரம் நடைபெற்ற இந்த மாரத்தான் போட்டியில் கோவையை சேர்ந்த சதீஷ் முதலிடத்தை பெற்றார். கேரளா மாநிலத்தைச் சேர்ந்த மனு மற்றும் அருண்குமார் ஆகியோர் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தை பிடித்தனர்

இதனை தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் முதல் 10 இடங்களை பிடித்தவர்களுக்கு பரிசுதொகை மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது. மேலும் போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.


