கோவில்பட்டியில் அகில இந்திய ஆக்கி; இன்று காலை நடந்த போட்டியில் டெல்லி பஞ்சாப் நேஷனல் வங்கி வெற்றி

நியூடெல்லி பஞ்சாப் நேஷனல் வங்கி அணியும் சென்னை தமிழ்நாடு லெவன் ஹாக்கி அணியும் ,மோதிய ஆட்டத்தில் ஒரு காட்சி.
கோவில்பட்டி செயற்கை புல்வெளி மைதானத்தில் இலட்சுமி அம்மாள் நினைவுக் கோப்பைக்கான 14வது அகில இந்திய ஆக்கிப் போட்டிகள் மே 23ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.
நேற்றைய மாலை போட்டிகள்
போட்டியின் இரண்டாம் நாளான நேற்று மாலை நடைபெற்ற 6வது லீக் போட்டியில் சென்னை இந்தியன் வங்கி அணியும் பெங்களூரு ஹாக்கி கர்நாடகா அணியும் மோதின.
இதில் இரு அணிகளும் தலா 2 கோல்கள் அடித்து சமநிலை பெற்றன. இந்தியன் வங்கி அணி வீரர் ஒய் ஆனந்த் 19வது மற்றும் 57வது நிமிடங்களில் பெனால்டி கார்னர் முறையில் கோல்கள் அடித்தார். கர்நாடகா அணி வீரர் எச்எம் ஆனந்த் 37வது மற்றும் 55வது நிமிடங்களில் பெனால்டி கார்னர் முறையில் கோல்கள் அடித்தார்.
சுப்பையா தாஸ் குமார் மற்றும் ராஜீவ் ரத்தன் ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர். சிறந்த ஆட்டக்காரர் விருது சென்னை இந்தியன் வங்கி அணி வீரர் ஒய் ஆனந்த்-க்கு வழங்கப்பட்டது.

அடுத்து நடைபெற்ற 7வது லீக் போட்டியில் சென்னை தமிழ்நாடு போலீஸ் அணியும் பெங்களூரு கனரா வங்கி அணியும் மோதின.
இதில் 4:1 என்ற கோல் கணக்கில் பெங்களூரு கனரா வங்கி அணி வெற்றி பெற்றது.
பெங்களூரு கனரா வங்கி வீரர்கள் 2வது நிமிடத்தில் குமார் யாதீஷ் (பீல்டு கோல்), 6வது நிமிடத்தில் பிருதிவிராஜ் (பெனால்டி கார்னர்), 11வது நிமிடத்தில் வினய் (பீல்டு கோல்), 28வது நிமிடத்தில் பிருதிவிராஜ் (பெனால்டி ஸ்டோக்), மற்றும் 52வது நிமிடத்தில் சென்னை தமிழ்நாடு போலீஸ் அணி வீரர் மதன் (பீல்டு கோல்) ஆகியோர் கோல்களை அடித்தனர்.

சரவணன் மற்றும் அஸ்லாம் ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர். சிறந்த ஆட்டக்காரர் விருது பெங்களூரு கனரா வங்கி அணி வீரர் பிருதிவிராஜ்-க்கு வழங்கப்பட்டது.
இறுதியில் நடைபெற்ற 8வது லீக் போட்டியில் நியூ டெல்லி மத்திய நேரடி வரிகள் வாரிய அணியும் மும்பை சென்ட்ரல் ரெயில்வே அணியும் மோதின.
இதில் 3:1 என்ற கோல் கணக்கில் நியூ டெல்லி மத்திய நேரடி வரிகள் வாரிய அணி வெற்றிப் பெற்றது.

மும்பை சென்ட்ரல் ரயில்வே அணி வீரர் மொஹமத் நீஜாமுதீன் 4வது நிமிடத்தில் பீல்டு கோல் முறையில் ஒரு கோல் போட்டார்.
நியூ டெல்லி மத்திய நேரடி வரிகள் வாரிய அணி வீரர் கார்த்தி 18வது (பீல்டு கோல்), 29வது (பெனால்டி கார்னர்) மற்றும் 60-வது (பெனால்டி ஸ்டோக்) நிமிடங்களில் அடுத்தடுத்து மூன்று கோல்கள் அடித்தார்.
சுரேஷ் குமார் மற்றும் அஜித் குமார் ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர். சிறந்த ஆட்டக்காரர் விருது நியூ டெல்லி மத்திய நேரடி வரிகள் வாரிய அணி வீரர் கார்த்திக்கு வழங்கப்பட்டது.
இன்று காலை நடந்த போட்டி
போட்டியின் மூன்றாம் நாளான இன்று 25ம் தேதி காலை 7 மணி அளவில் நடைபெற்ற 9வது லீக் போட்டியில் நியூடெல்லி பஞ்சாப் நேஷனல் வங்கி அணியும் சென்னை தமிழ்நாடு லெவன் ஹாக்கி அணியும் மோதின.

இப்போட்டியில் நியூடெல்லி பஞ்சாப் நேஷனல் வங்கி அணி வீரர்கள் 3வது நிமிடத்தில் குருசிம்ரன் சிங் (பெனால்டி ஸ்டோக்), 6வது நிமிடத்தில் சுமீத் டோப்போ (பீல்டு கோல்), 10வது நிமிடத்தில் சச்சின் (பீல்டு கோல்),
27வது நிமிடத்தில் சடேந்தர் குமார் (பீல்டு கோல்), 38வது நிமிடத்தில் குருசிம்ரன் சிங் (பெனால்டி கார்னர்), 45வது நிமிடத்தில் நவீன் அன்டில் (பீல்டு கோல்) மற்றும் 53வது நிமிடத்தில் இன்டெர்பால் சிங் (பீல்டு கோல்)ஆகியோர் கோல்களை அடித்து அணிக்கு வெற்றியை தேடி தந்தனர்.
சென்னை தமிழ்நாடு லெவன் ஹாக்கி அணி வீரர்கள் 15வது நிமிடத்தில் ஸ்ரீனிவாசன் (பெனால்டி ஸ்டோக்) மற்றும் 31வது நிமிடத்தில் கெளதம் (பீல்டு கோல்), ஆகியோர் கோல்களை அடித்தனர்.
இறுதியில் 7:2 என்ற கோல் கணக்கில் நியூடெல்லி பஞ்சாப் நேஷனல் வங்கி அணி வெற்றி பெற்றது

சுப்பையா தாஸ் மற்றும் சரவணன் ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர். சிறந்த ஆட்டக்காரர் விருது நியூடெல்லி பஞ்சாப் நேஷனல் வங்கி அணி வீரர் குருசிம்ரன் சிங்-வுக்கு வழங்கப்பட்டது.
இன்று மாலை 5 மணியளவில் நடைபெறும் 10வது லீக்போட்டியில் சென்னை இன்கம் டேக்ஸ் ஹாக்கி அணியும் புபனேஸ்வர் நிஸ்வாஸ் ஹாக்கி கழக அணியும் மோதுகின்றன.
மாலை 6.30 மணியளவில் நடைபெறும் 11வது லீக் போட்டியில் சென்னை அக்கவுண்டெண்ட் ஜெனரல் ஆபீஸ் ரெக்கிரியேஷன் கிளப் ஹாக்கி அணியும் கர்நாடகா ஹாக்கி பெல்லாரி அணியும் மோதுகின்றன.
இரவு 8 மணியளவில் நடைபெறும் 12வது லீக் போட்டியில் மும்பை யூனியன் வங்கி அணியும் கோவில்பட்டி எஸ்.டி.ஏ.டி எக்ஸலன்ஸ் ஹாக்கி அணியும் மோதுகின்றன.
