கோவில்பட்டியில் தேசிய கொடி ஏந்தி பாஜகவினர் ஊர்வலம்

தூத்துக்குடி வடக்கு மாவட்டம் கோவில்பட்டி கிழக்கு ஒன்றியம் பாரதிய ஜனதா கட்சி சார்பாக ஒன்றிய பொதுச்செயலாளர் வேல்முருகன் தலைமையில் தேசிய கொடி ஊர்வலம் நடைபெற்றது.
பகல்ஹாம் பயங்கரவாதிகளை ஆபரேஷன் சிந்தூர் மூலம் நமது ராணுவம் தாக்குதல் நடத்தி வெற்றி பெற்றதைக் கொண்டாடும் விதமாக ,ராணுவ வீரர்களையும், பாரத பிரதமரையும் பாராட்டி இந்த ஊர்வலம் நடைபெற்றது.

ராஜீவ்நகர் இ பி காலனியில் தொடங்கி பிள்ளையார் கோவில் தெரு, ஆனந்த நகர், பிள்ளையார் கோவில் வடக்கு தெரு,மெயின் ரோடு ஆகிய வீதிகளில் பேரணி சென்றது.

பாஜக முன்னாள் மாவட்ட துணை தலைவர் பாலு,முன்னாள் நகர பொருளாளர் பாலமுருகன்,பட்டியல் அணி ஒன்றிய தலைவர் பொன்னுத்துரை, ராஜீவ்நகர் கிளைதலைவர் குமார்,மகளிர் அணி பொருளாளர் தில்லை,முன்னாள் மாவட்ட துணை தலைவர் உமாசெல்வி,சக்தி கேந்திர அழகுமீனாட்சி, ஊடகப்பிரிவு மாவட்டத் தலைவர் அம்மன் மாரிமுத்து மற்றும் பலர் கலந்து கொண்டனர்


