தூத்துக்குடி மாவட்ட சப் ஜூனியர் பெண்கள் ஆக்கி அணி: 21 வீராங்கனைகள் பயிற்சி முகாமுக்கு தேர்வு

தூத்துக்குடி மாவட்ட சப் ஜூனியர் பெண்கள் ஆக்கி அணி தேர்வு இன்று காலை கோவில்பட்டி வ உ சி அரசு மேல்நிலைப்பள்ளி ஆக்கி மைதானத்தில் நடைபெற்றது 50-க்கும் மேற்பட்ட வீராங்கனைகள் தேர்வில் கலந்து கொண்டனர் இவர்களில் 21 வீராங்கனைகள் பயிற்சி முகாமுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
ஆக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி செயலாளர் முனைவர் குரு சித்திர சண்முக பாரதி தலைமையில் தேர்வு குழு உறுப்பினர்களான காமராஜ் மெட்ரிக் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் சுரேஷ்குமார் ஆக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி துணைச் செயலாளர் மாரியப்பன் மற்றும் வேல்முருகன் ஆகியோர் தேர்வு செய்தனர்

பயிற்சி முகாமுக்கு தேர்வு செய்யப்பட்ட வீராங்கனைகள் பின்வருமாறு:
லட்சுமி அம்மாள் ஸ்போர்ட்ஸ் அகாடமி:1) அஸ்வதி 2) செல்வ ராணி 3) விஜயலக்ஷ்மி 4) ஜெய மாரியம்மாள் 5) தீபிகா 6) P. ஐஸ்வர்யா
7) காவ்யா
ராஜீவ் காந்தி விளையாட்டு கழகம்:8) ஐஸ்வர்யா 9) அர்ச்சனா10) நர்சிகா ஸ்ரீ
பாண்டவர்மங்கலம் ஹாக்கி கிளப்: 11) சபிதா
அம்பேத்கர் ஆக்கி கிளப்: 12) கிருத்திகா
வேல்ஸ் ஆக்கி அகாடமி:13) கயல் வர்ஷா 14) தீபா முகிஷிகா
இலுப்பையுரணி ஆக்கி கிளப்:15) ஐஸ்வர்யா
தூத்துக்குடி டவுன் ஆக்கி கிளப்: 16) M. பவித்ரா 17) மதுமிதா 18) சந்தியா
தூத்துக்குடி தஷ்னவிஸ் மாதா பெண்கள் மேல்நிலைப்பள்ளி:19) சரண்யா 20) V. R. பவித்ரா 21) கௌரி லட்சுமி

பயிற்சி முகாம் மே 2 தேதி காலை முதல் வ உ சி அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெறும். பயிற்சி முகாமில் சிறப்பாக விளையாடும் 18 பேர் மாவட்ட அணிக்காக தேர்வு செய்யப்பட்டு புதுக்கோட்டையில் மே 5 முதல் 8 ம் தேதி வரை நடைபெறும் மாவட்டங்களுக்கு இடையிலான மாநில ஆக்கிப்போட்டியில் கலந்து கொள்வார்கள்.







