கோவில்பட்டியில் அகில பாரத இந்து மகா சபா பொதுக்கூட்டம்


அகில பாரத இந்து மகா சபா சார்பில் கோவை முதல் குமரி வரை இந்து ஸ்வாமிமான் யாத்திரை இந்துக்களின் விழிப்புணர்வு யாத்திரை கடந்த 25-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது.
இந்த யாத்திரை நேற்று மாலை கோவில்பட்டி வந்தடைந்தது. தொடர்ந்து கிருஷ்ணன் கோவில் திடலில் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் நடந்தது. அர்ச்சகர் பேரவை மாநில அமைப்பாளர் பாலகிருஷ்ணசர்மா தலைமை தாங்கினார். மாநில இளைஞரணி துணைத் தலைவர் சங்கர் ராஜா முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் தமிழ்நாடு மாநில தலைவர் பாலசுப்பிரமணியன், மாநில துணைத் தலைவர் புருஷோத்தமன் ஆகியோர் பேசினர். தொடர்ந்து தேசிய தலைவர் சுவாமி சக்கரபாணி மஹராஜ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
இன்று காலை சுவாமி சக்கரபாணி மஹராஜ், கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் தரிசனம் செய்தார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
பாகிஸ்தான் பயங்கரவாதிகள் காஷ்மீரில் இந்துக்களை குறி வைத்து தாக்கி உள்ளனர். இது தேசத்துக்கு அவமானம். மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தீவிரவாதி, பயங்கரவாதி விஷயத்தில் மதச்சார்பற்றது என்பதே கிடையாது. இது நாட்டுக்கு நல்லதல்ல.
தீவிரவாதிகள், பயங்கரவாதிகளை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். பயங்கரவாதத்தை நாங்கள் எதிர்த்துக் கொண்டே இருப்போம். பயங்கரவாத்தை முறியடிக்கும் மத்திய அரசின் செயல்பாடுகளுக்கு இந்து மகா சபா உறுதுணையாக இருக்கும். பயங்கரவாதத்தில் மதம் பார்க்கக்கூடாது. பயங்கரவாதம் யார் செய்தாலும் அப்புறப்படுத்த வேண்டும்.
விரைவில் இந்த நாடு இந்து நாடாக அறிவிக்கப்பட வேண்டும். இந்து ராஷ்டிரம் உருவாக்கப்பட வேண்டும். ஆலயங்கள் எல்லாம் பாதுகாக்கப்பட வேண்டும். தஞ்சாவூரில் உள்ள மகாமகம் கும்பமேளாவை தேசிய அளவில் அறிவிக்கப்பட வேண்டும்
இவ்வாறு அவர் கூறினார்.

.

தொடர்ந்து அவர் கெச்சிலாபுரத்தில் விநாயகர் கோயில் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார். பின்னர் யாத்திரை குழுவினர் திருச்செந்தூர் புறப்பட்டுச் சென்றனர்.
இந்து மகா சபா மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன், தென்மண்டல தலைவர் இசக்கிராஜா, தூத்துக்குடி மாவட்ட தலைவர் பழனிச்சாமி,பொதுச் செயலாளர் ஆரோக்கியராஜ்,மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் உத்தண்டராமன்,பொதுச் செயலாளர் ராஜசங்கர் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்
