சிமெண்டு பாரம் ஏற்றி சென்ற லாரி, சாலை தடுப்பில் மோதி விபத்து
விருதுநகர் மாவட்டம் ஆர்.ஆர். நகரில் உள்ள தனியார் சிமெண்டு ஆலையில் இருந்து கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்திற்கு சிமெண்டு மூட்டைகளை ஏற்றிக் கொண்டு ஒரு லாரி சென்றது. லாரியை மார்த்தாண்டத்தை சேர்ந்த விவின் என்பவர் ஓட்டி சென்றார்.
அந்த லாரி கோவில்பட்டி இனாம் மணியாச்சி பகுதியில் நான்கு வலிசாலையில் சென்றபோது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே இரும்பு தடுப்பு வேலியில் மோதியது.
சுமார் 200 மீட்டர் தூரம் வரை தடுப்புகளை உடைத்து கொண்டு போய் லாரி நின்றது. இந்த விபத்தில் லாரியின் முன் பகுதி பலத்த சேதம் அடைந்தது. நல்லவேளையாக லாரி டிரைவர் காயமின்றி உயிர் தப்பினார். இந்த விபத்து குறித்து கோவில்பட்டி மேற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.









