• October 21, 2026

தமிழ்நாட்டில் மையோனைஸ் விநியோகத்துக்கு ஓராண்டு தடை

 தமிழ்நாட்டில் மையோனைஸ் விநியோகத்துக்கு ஓராண்டு தடை

இளைஞர்கள் அதிக அளவில் ஓட்டல்களில் விரும்பி சாப்பிடும் கிரில் சிக்கன்,பிரை சிக்கனுக்கு முட்டையில் இருந்து தயாரிக்கப்படும் மையோனைசை பயன்படுத்துகிறார்கள்.

மேலும் ஷவர்மா, தந்தூரி, சான்ட்விச், சலாட், பார்பிகியூ உள்பட துரித உணவுகளில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
இந்த நிலையில் முறையற்ற வகையில் மையோனைஸ் தயார் செய்வது மற்றும் முறையாக சேமித்து வைக்கப்படாமல் இருப்பது என்பன உள்ளிட்ட காரணங்களால் மையோனைஸ் பொது சுகாதாரத்திற்கு அதிக பாதிப்பை விளைவிப்பதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டம், 2006-ன் பிரிவு 30 (2) (a) படி முட்டையிலிருந்து தயாரிக்கப்படும் மையோனைஸ் வகைகளுக்கு ஓராண்டு காலம் தடை விதிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவின்படி பொதுமக்கள் நலன் கருதி தமிழ்நாட்டில் எந்த பகுதியிலும், மையோனைஸ் உற்பத்தி செய்வது, சேமித்து வைப்பது, விநியோகம் செய்வது, விற்பனை செய்வது உள்ளிட்டவைகளுக்கு தடை விதிப்பதாக இந்த அரசிதழில்  தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத் துறை சார்பில் வெளியிடப்பட்ட தமிழ்நாடு அரசிதழில், ஏப்ரல் 8ம்  தேதியிலிருந்து ஓராண்டு காலத்திற்கு இந்த தடை உத்தரவு அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மயோனைஸ் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், அதற்கு மாற்று உணவுப் பொருள் என்ன? என்று உணவுப் பிரியர்கள் யோசித்து வருகின்றனர். தற்போது, அதற்கு மாற்றாக மிராக்கிள் விப், கிரேக்க தயிர், அக்வா பாபா, புளிப்பு கிரீம், வெண்ணெய், தஹினி, அவகேடோ, டோபு போன்றவற்றை பயன்படுத்தலாம் என்று சில உணவு தயாரிப்பு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *