கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிறப்பு அன்னதானம்

கோவில்பட்டியில் ராகவேந்திரா சேவா அறக்கட்டளை சார்பில் கோவில்பட்டி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை பிரசவ வார்டு வளாகத்தில் சிறப்பு அன்னதானம் நடைபெற்றது
ஸ்ரீ ஜீவ அனுக்கிரக பொதுநல அறக்கட்டளை நிறுவனர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். நகர்மன்ற உறுப்பினரும் ராகவேந்திரா சேவா அறக்கட்டளை நிர்வாகியுமான சண்முகவேல் முன்னிலை வகித்தார். அன்னதான நிகழ்ச்சியை ஆசிரியை ஆனந்த வள்ளி சீனிவாசன் தொடங்கி வைத்தார். முன்னதாக உலக மக்கள் நலன் வேண்டி சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் ஸ்ரீ ராகவேந்திரா சேவா அறக்கட்டளை நிறுவனர் சீனிவாசன், பொருளாளர் கார்த்திகேயன், செயற்குழு உறுப்பினர்கள் தங்கராஜ், பாண்டியன், நிர்வாகி மகேஷ், ஆவின் அருணாசலம், பெருமாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்,


