போக்சோ வழக்கில் கைதானவருக்கு 5 ஆண்டு சிறை :
தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2014ம் ஆண்டு 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஆழ்வார்திருநகரி செம்பூர் பகுதியைச் சேர்ந்த உதயசிங் மகன் மாரி (எ) மாரிமுத்து (29) என்பவரை ஆழ்வார்திருநகரி போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்தனர்.
இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ் நேற்று குற்றவாளியான மாரி (எ) மாரிமுத்துக்கு 5 வருடங்கள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூபாய் 8,000/- அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு நிவாரண நிதியிலிருந்து ரூ.1,00,000 வழங்கவும் உத்தரவிட்டார்.
இவ்வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய ஆழ்வார்திருநகரி காவல் நிலைய ஆய்வாளர் லெட்சுமிபிரபா, குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் முத்துலட்சுமி, விசாரணைக்கு உதவியாக இருந்த முதல் நிலை காவலர் பூர்ணகலா ஆகியோரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பாராட்டினார்.







