கோவில்பட்டியில் குடியரசுதின கொடியேற்று விழா நிகழ்ச்சிகள்


கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் 76வது குடியரசு தின விழாவை முன்னிட்டு கோவில்பட்டி சட்டமன்ற அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர்,சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜு தேசியக் கொடியேற்றி,இனிப்பு வழங்கினார்.
நிகழ்ச்சியில் அதிமுக நகரச் செயலாளர் விஜய பாண்டியன் ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி, அன்புராஜ், அழகர்சாமி,மாநில,மாவட்ட, நகர,ஒன்றிய,மகளிர் அணி மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
கோவில்பட்டி நகராட்சி அலுவலகத்தில் 76வது குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. கோவில்பட்டி நகராட்சி ஆணையாளர் கமலா தலைமை தாங்கினார் ,நகர்மன்ற தலைவர் கருணாநிதி தேசிய கொடி ஏற்றி சிறப்புரையாற்றினார்.
குடியரசு தின விழாவில்,நகராட்சி பொறியாளர் சணல்குமார்,நகர்நல அலுவலர் வசுமதி,வருவாய் ஆய்வாளர் நாகராஜ்,நகராட்சி ஊழியர்கள் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
கோவில்பட்டி சார்பு நீதிமன்றத்தில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. சார்பு நீதிமன்ற நீதிபதி மாரிக்காளை தேசிய கொடி ஏற்றினார்.மாவட்ட உரிமையியல் நீதிபதி கருப்பசாமி,குற்றவியல் நீதிபதி எண் 2 பீட்டர்,விரைவு நீதிமன்றம் பாஸ்கர்,கோவில்பட்டி வழக்கறிஞர்கள் சங்கம் தலைவர் சங்கர் கணேஷ், வழக்கறிஞர்கள் சந்திரசேகர்,முத்துக்குமார்,கார்த்திபராஜ்,ஜெயஸ்ரீ கிறிஸ்டோபர் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் கலந்து கொண்டனர்







