கோவில்பட்டி மத்திய நகர் அரிமா சங்கம் சார்பில் 6 கி.மீ.தூர மாரத்தான் ஓட்டப்பந்தயம்
கோவில்பட்டி மத்திய நகர் அரிமா சங்கம் சார்பில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு சங்க செயலாளர் தலைமை தாங்கினார் பொருளாமார் பூபதி முன்னிலை வகித்தார். சங்கத்தலைவர் சுப்புராஜா வரவேற்று பேசினார்.
சிறப்பு விருந்தினராக முன்னாள் ஆளுநர் . பிரான்சிஸ் ரவி கலந்து கொண்டு தேசியகொடியை ஏற்றி வைத்தார்., 6 ஜிலோ மீட்டர் தூர மாரத்தான் ஓட்டப்பந்தயத்தை தொடங்கி வைத்தார். மந்திதோப்பு ரோடு லயன்ஸ் சங்கத்தில் தொடங்கி கெச்சிலாபுரம் விலக்கு வரை சென்று மீண்டும் லயன்ஸ் சங்கத்தில் முடிவடைந்தது.
இதில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் மாணவிகள் சிலர் பங்கேற்றனர். பந்தய தூரத்தை முதலில் கடந்து வெற்றி பெற்ற .சைன் அத்லட்டிக் அகடமி எம். விக்னேஷ் துரைக்கு சான்றிதழ் மற்றும் பரிசு தொகை ரூ.3 ஆயிரம் வழங்கப்பட்டது.
இரண்டாவது பரிசினை கோவில்பட்டி செயின்ட் ஜோசப் மேல்நிலைப்பள்ளி மாணவர் யோகிராஜ் பெற்றுக்கொண்டார். அவருக்கு சான்றிதழ் மற்றும் பரிசுந்தொகையாக ரூ. 2 ஆயியம் வழங்கப்பட்டது. பரிசினை நாலாட்டின்புத்தூர் கே.ஆர்.சாரதா மேல் நியைப்பள்ளி மாணவர் அஸ்வின் பெற்றார் அவருக்கு சான்றிதழ் மற்றும் பரிசுத்தொகை ரூ.1,௦௦௦ வழங்கப்பட்டது. நான்காம் பரிசை லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் மாணவன் குமரேசன் பெற்றுக்கொண்டார்.
பெண்களுக்கான சிறப்பு பரிசு வானரமுட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணமி மலர் பெற்றார், அவருக்கு சான்றிதழ் மற்றும் ரூ.1௦௦௦ பரிசு வழங்கப்பட்டது.. முடிவில் கோ. சுப்பராயன் நன்றி கூறினார். விழாவில் லயன்ஸ் சங்கத்தை சேர்ந்த பரமசிவம், சுகுமார் ராஜா, ராஜதுரை, முத்து, வன்னியன், சவுந்தரராஜன், சந்திரன் , ஆனந்தராஜ், திருமலைக்குமார், அசோக் வள்ளிநாயகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.