கோவில்பட்டி வேலாயுதபுரத்தில் விளையாட்டு போட்டிகள்: வெற்றி பெற்றவர்களுக்கு போலீஸ் துணை சூப்பிரண்டு பரிசுகள் வழங்கினார்
கோவில்பட்டி வேலாயுதபுரம் தைப்பொங்கல் குழுவினரின் 9-ம் ஆண்டு விளையாட்டுப் போட்டி மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. உறியடித்தல், கயிறு இழுத்தல், கோலப்போட்டி, மியூசிக்கல் சேர், பலூன் உடைத்தல், பாட்டிலில் தண்ணீர் நிரப்புதல் என பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டிகளில் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
இதை தொடர்ந்து பரிசளிப்பு விழா நடைபெற்றது. நகர் மன்ற தலைவர் கருணாநிதி தலைமை தாங்கினார். வேலாயுதபுரம் 5-வது வார்டு தி.மு.க. நகர் மன்ற உறுப்பினர் லவராஜா, அமலி டிராவல்ஸ் உரிமையாளர் அமலி பிரகாஷ், ஏ.எஸ்.ஆர்.சுரேஷ் , ஆனந்த ஜோதி டீ ஸ்டால் திருமணி ஆகியோர் கலந்து கொண்டு விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைத்தனர்.
.விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கோவில்பட்டி போலீஸ் துணை சூப்பிரண்டு ஜெகநாதன், ஸ்ரீ ராகவேந்திரா சேவா அறக்கட்டளை நிறுவனர் சீனிவாசன், நகர்மன்ற உறுப்பினர் லவராஜா, திருமணி உள்ளிட்டோர் பரிசுகளை வழங்கி வாழ்த்தி பேசினர்.







