கோவில்பட்டி வேல்ஸ் வித்யாலயா பள்ளியில் பொங்கல் விழா

கோவில்பட்டி வேல்ஸ் வித்யாலயா பள்ளியில் பொங்கல் விழா மற்றும் விருது வழங்கும் விழா நடந்தது.
பள்ளி தாளாளர் நாகமுத்து தலைமை தாங்கினார். பள்ளி இயக்குனர் விஜயலட்சுமி நாகமுத்து முன்னிலை வைத்தார். பட்டிமன்ற பேச்சாளர் நெல்லை சுப்பையா வரவேற்றார்.
கடம்பூர் ராஜு எம்எல்ஏ., திரைப்பட நடிகர் பாண்டியராஜன், ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். டாக்டர்கள் பத்மாவதி, சண்முகம் ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
“மகிழ்ச்சியும் மன நிறைவும் தருவது கிராம வாழ்க்கையா, நகர வாழ்க்கையா,” என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடந்தது. மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடந்தது.
பள்ளி மாணவ மாணவிகள் பொங்கல் வைத்து விழாவை கொண்டாடினார்கள். பள்ளி முதல்வர் பொற் கமலன் நன்றி கூறினார்.
