பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ1000 வழங்ககோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடி வடக்குமாவட்டம் தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் கோவில்பட்டி இ எஸ் ஐ மருத்துவமனை அருகில் தேமுதிக வடக்கு மாவட்டசெயலாளர் சுரேஷ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட அவைத்தலைவர் கொம்பையாபாண்டியன், மாவட்ட துணைசெயலாளர்கள் மாரிச்செல்வம், ராஜபாண்டி, பொதுக்குழு உறுப்பினர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழக அரசு பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ1000 வழங்கவும், மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கவும், பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கவும், போதையில்லா தமிழகத்தை உருவாக்க கோரி இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் தேமுதிக நகர செயலாளர் நேதாஜி பாலமுருகன். ஒன்றியசெயலாளர் விளாத்திகுளம் தங்கச்சாமி, மாரியப்பன், கோட்டைச்சாமி, கோவில்பட்டி பொன்ராஜ்,புதூர் மணிகண்டன், ஆறுமுகபெருமாள், கயத்தார் நடராஜன், கண்ணண் ,மாவட்ட மகளிரணி செயலாளர் வெண்ணிலா, சந்தனமாரி,மாவட்ட கேப்டன் மன்ற துணைசெயலாளர்கள் மேகலிங்கம், குவாளிஷ்ராஜ், பிச்சைமணி, மாவட்ட தொழில்சங்க துணைதலைவர் முருகன் கருப்பசாமி, ஒன்றிய துணைசெயலாளர் சென்னையம்பட்டி நாராயணன், மகேந்திரன், நகரநிர்வாகிகள் மதிமுத்து, பொன்பாண்டி, பிரசன்னா, கணேசமூர்த்தி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்ட முடிவில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனுஅளித்தனர்