மாட்டு சாணத்தை விரும்பி வாங்கும் நாடுகள்
மாடுகளின் சாணத்தின் மதிப்பை உணர்ந்த வெளிநாட்டினர் போட்டி போட்டுக்கொண்டு வாங்கிட விரும்புகின்றனர்.அப்படி என்ன மாட்டுச்சாணத்தில் இருக்கிறது என்றால் நீங்க ஆச்சரியப்படுவீர்கள்.
மாட்டுசாணத்தில் கால்சியம் , பொட்டாசியம், செல்லுலோஸ் நைட்டிஜன் மற்றும் பல நுண் வேதிபொருட்கள் மட்டுமல்லாது பல நன்மை செய்யும் நுண்ணுயிர்களும் ஏராளமாக உள்ளன. மாட்டு சாணம் இருந்தாலே அந்த வாடைக்கு ஏகப்பட்ட மண்புழுக்கள் ஓடி வரும்.
நம்முடைய முன்னோர்கள் காலம்காலமாக மாட்டு சாணத்தை யும் கால்நடைகளின் கழிவுகளையும் தான் நிலத்தில் இட்டு வந்தனர் அப்போது எல்லாம் மண்ணின் கரிமசத்து ( ORGANIC CARBON CONTENT) அதிகமாக இருந்தது என்று டிராக்டர் உழவு போடும்முறை வந்ததோ, அன்றிலுருந்து கால்நடைகள் ( ஆடு மாடு ) கிராமப்புற ங்களில் படிப்படியாக குறைந்து வருகின்றன,
அது மட்டுமல்லாது ரசாயன உரங்களின் பயன்பாட்டால் நல்ல வளமான நிலம்கூட இன்று வளமிழந்து களர் / உவர் நிலங்கள் மாறி வருவதுடன் மண்வளத்தையும் இழுந்து இன்று விளைச்சலை ( மகசூலை) கிள்ளிக் கொடுக்கின்றன அதனால் தான் என்னவோ இயற்கை விஞ்ஞானி ஐயா நம்மாழ்வார் , பயிரை பற்றி கூறுகையில், அடி மாட்டுக்கு நுனி வீட்டு” என்றார் .
அவரை போன்றே பத்மஸ்ரீ.சுபாஷ் பாலேக்கர் கோருகையி௮ல்.” , ஓரு பசுமாடு இருந்தாலே போதும் 30ஏக்கர் விவசாயம் செய்யலாம் என்று .எனவே இதிலிருந்து மாட்டு சாணத்தின் மகிமை நாம் அறிவோம்.அதுமட்டுமல்லாது கிருமி நாசினியாகவும், எரிபொருள் தயாரிக்கவும் ( கோபர் கேஸ் ) உரமாகவும் பெயிண்ட் தயாரிக்கவும் விபூதி தயாரிக்கவும் என பல்வேறு வழிகளில் சாணத்தை பயன்படுத்த படுகிறது” என்று குறிப்பிட்டார்.
அரபு நாடுகள் ( குவைத் உள்பட) பாலைவன மணல் நிரம்பிய நாடுகள் அந்த மண்ணில் எவ்வித நுண்ணூட்ட சத்துகளும் இல்லாத காரணத்தால் அங்கு பயிரிடப்பட்ட பேரீச்சம் செடிகளுக்கு நுண்ணூட்ட சத்தும் உரமும் தேவைபடுகிறது.
அவர்கள் நம்முடைய நாட்டிலே இருந்து அதிக விலைக்கு கொள்முதல் செய்து ஓரு கிலோ 30முதல் 50வரை போட்டி போட்டுக்கொண்டு அரபு நாடுகள் வாங்கின்றன.
இவற்றை ( சாணத்தை) பவுடராக்கி ( தூளாக) மாற்றி நன்றாக மக்கிய உரத்தை பேரீச்சம் பழத்தில் இடுவதால் நல்ல தரமான பழங்களும் கூடுதலான விளைச்சலும் தந்துள்ளதாக ஆய்வு கள் கூறுகின்றன.
.தற்போதுகூட குவைத் நாடு 192 மெட்ரிக் டன் கொள்முதல் ஆர்டர் செய்துள்ளதாக தெரிகிறது.
இந்தியாவில் கால்நடைகள் கிட்டத்தட்ட 30 கோடிகள் இருப்பதாகவும் அவை தினமும் 30 லட்சம் டன் சாணம் உற்பத்தியாகின்றது என்பது குறிப்பிடத்தக்க தகவலாகும்.’
மாட்டு சாணத்திலிருந்து வேளாண் பயிருக்கு தேவையான வளர்ச்சிஊக்கிகள் , பூச்சி விரட்டிகள் என 3 6விதமான பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன என்றால் ஆச்சரியமாக இருக்கிறதா.
எனவே வீட்டுக்கு வீடு கால்நடைகளை வளர்ப்போம் நிலத்தையும் மண்ணையும் வளமாக்குவோம்.
அக்ரி சு.சந்திர சேகரன்,வேளாண் ஆலோசகர், அருப்புக்கோட்டை.







