கோவில்பட்டியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நூற்றாண்டு விழா நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம்

கோவில்பட்டி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஜீவா இல்லத்தில் ஏஐடியுசி இளையரசனேந்தல் ரோடு சுமை தூக்கும் தொழிலாளர் சங்கம் சார்பாக நூற்றாண்டு விழா ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
டிசம்பர் 26 தேதி நூற்றாண்டு விழாவை கோவில்பட்டியில் சிறப்பாக நடத்துவது பற்றியும்,சங்க செயல்பாடுகள், அமைப்பு முறை பற்றியும் ஆலோசனை நடைபெற்றது,
கூட்டத்திற்கு ஏஐடியுசி மாவட்டச் செயலாளர் பாபு தலைமை தாங்கினார்.,ஏஐடியுசி பஞ்சாலை தொழிற்சங்க தலைவர் பரமராஜ் விளக்க உரையாற்றினார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகர துணைச் செயலாளர் அலாவுதீன், இளைஞர் பெருமன்றம் நகரச் செயலாளர் செந்தில் ஆறுமுகம்,சுமை தூக்கும் தொழிலாளர் சங்கத் தலைவர் வள்ளிராஜ்,செயலாளர் முனியசாமி,பொருளாளர் ஜான்சன்,கணக்கர் கனகராஜ் மற்றும் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்







